என் மலர்
நீங்கள் தேடியது "சத்தீஸ்கர்"
- இந்த விபத்தில் சிக்கி பலர் காயமுற்றனர்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கி பலர் காயமுற்றனர்.
விபத்து குறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வர் நாக் கூறும் போது, "ஜக்தல்பூரின் தர்பா காவல் நிலை எல்லைக்கு உட்பட்ட சந்தமேட்டா கிராமத்திற்கு அருகே 45 பேரை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியது," என்றார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
"சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியதாக மாலை 4.30 மணி அளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதுவரை காயமுற்ற 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் உயிரிழந்தார்," என்று மருத்து அதிகாரியான திலீப் காஷ்யப் தெரிவித்தார்.
இந்த விபத்து நேற்று பிற்பகலில் நடைபெற்ற நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக திலீப் காஷ்யப் தெரிவித்தார்.
- வாரந்தோறும் சனிக்கிழமை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர்.
- அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார்.
வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று வரும் அழைப்பை நம்பி தினமும் பலர் ஏமாறுகின்றனர். ஆனால் சத்தீஸ்கரில் விவசாயிக்கு கடன் தருகிறேன் என கூறி வங்கி மேனேஜரே ஏமாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள மஸ்தூரி நகரில் வங்கி மேனேஜர், விவசாயியிடம் ரூ.12 லட்சம் கடன் தருவதாக கூறி விவசாயியிடம் உள்ள மொத்தம் 900 கோழிகளையும் வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார் வங்கி மேனேஜர்.
பாதிக்கப்பட்ட விவசாயி ரூப்சந்த் மன்ஹர், மஸ்தூரியில் நாட்டுக் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டி கடனுக்காக [ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா] வங்கியை அணுகினார். அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார். இதை நம்பிய மன்ஹர் பணத்தை ஏற்பாடு செய்து மேனேஜருக்கு கொடுத்தார்.
ஆனாலும் ஆசை அடங்காத மேனேஜர், கோழிக் கறி மீது தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தி, வாரந்தோறும் சனிக்கிழமை மன்ஹரை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர். கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மன்ஹர் இதுவரை மொத்தம் ரூ.39,000 மதிப்புள்ள 900 கோழிகளை மேனேஜருக்கு கொடுத்துள்ளார்.
இருந்தும் வங்கி மேலாளர் கடன் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். எனவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மன்ஹர் சம்பவத்தின் விவரங்களையும், தான் சப்ளை செய்த கோழிகளுக்கான பில்களையும் போலீசிடம் சமர்ப்பித்து புகார் அளித்தார்.
தனக்கு நீதி கிடைக்காவிட்டால் வங்கியின் முன் தீக்குளிக்கப் போவதாகக் கூறி, மன்ஹர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து வங்கி மேனேஜர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுக்மா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ஏ.கே. 47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆண்டில் சுக்மா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 207 நக்சலைட்களின் உடல்கள் மீட்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மந்திரி அருண் சாவோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுக்மாவில் பாதுகாப்பு படையினர் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளனர். பாதுகாப்புப் படைவீரர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நாங்கள் அரசாங்கத்தை அமைத்த பிறகு, கடுமையான நிலப்பரப்புகளிலும் பாதுகாப்புப் படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மாவோயிஸ்ட்கள் இல்லாத பகுதியாக பஸ்தார் வெகு விரைவில் மாறி விடும். அங்கு அமைதி மீட்டெடுக்கப்பட்டு வளர்ச்சிப் பாதைக்கு வரும் என தெரிவித்தார்.
- கரண் தனது மனைவியிடம் மது குடிக்க ரூ.500 தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
- குடிபோதையில் இருந்த கரண் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மனைவி குடிக்க பணம் தராததால் விரக்தியடைந்த கணவன் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் கரண் (26) என்ற நபர் வசித்து வருகிறார். அவர் தனது மனைவியிடம் மது குடிக்க வேண்டுமென்று ரூ.500 தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் குடிபோதையில் இருந்த கரண் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்வதாக கூறி மிரட்டியுள்ளார். இதனையடுத்து அங்கு கூடிய மக்கள் அவரிடம் பணம் தருவதாகவும், மது பாட்டில் வாங்கித் தருவதாகவும் கூறி கீழே இறங்க சொல்லியுள்ளனர்.
காரனின் தாயார் சமபவ இடத்திற்கு வந்து அவரை கீழே இறங்குமாறு கெஞ்சியுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கரணை கீழ் இறங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
அவ்வப்போது கீழே இறங்கி வரும் கரண் மீண்டும் மேலே ஏறி போலீசாருக்கு நீண்ட நேரமாக போக்கு காட்டியுள்ளார். பின்னர் போலீசாரின் நீண்ட நேர முயற்சிக்கு பின்பு கரண் கீழே இறங்கி வந்தார்.
- குடிநீரில் லிட்டருக்கு 15 மைக்ரோகிராம் மேல் இருக்கக்கூடாது, ஆனால் இங்கு குடிநீரில் லிட்டருக்கு 100 மைக்ரோகிராம் யுரேனியம் உள்ளது.
- பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட 12 மாநிலங்களில் குடிநீரில் யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிவிட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்கள் குடிநீராகப் பயன்படுத்தும் நிலத்தடி நீரில் அபாயகரமான அளவுக்கு யுரேனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களுக்குப் புற்றுநோய்கள், நுரையீரல் பாதிப்பு, தோல் மற்றும் சிறுநீரக நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
2017 இல் வெளியான உலக சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைப்படி குடிநீரில் லிட்டருக்கு 15 மைக்ரோகிராம் மேல் இருக்கக்கூடாது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மற்றும் லிட்டருக்கு 30 கிராம் வரை யுரேனியம் கலந்திருந்தாலும் பிரச்சனையில்லை என்று கூறுகிறது.
ஆனால் சத்தீஸ்கரில் உள்ள துர்க், ராஜ்நந்த்கான், கான்கெர், பெமேதாரா, பலோட் மற்றும் கவர்தா ஆகிய மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் லிட்டருக்கு 100 மைக்ரோகிராம் அளவுக்கு அதிகமாக யுரேனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியாக பலோடில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் லிட்டருக்கு 130 மைக்ரோகிராம் அளவுக்கு யுரேனியம் கலந்துள்ளது.
மேலும் ஆறு மாவட்டங்களில் 1 லிட்டர் குடிநீரில் சராசரியாக 86 முதல் 105 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் கலந்திருக்கிறது. இதனால் அந்த நீரை குடிக்கும் மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் இதற்கான தீர்வு குறித்து பெரிய அளவிலான விவாதமோ முன்னெடுப்போ மேற்கொள்ளப்படாதது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சத்தீஸ்கரில் மட்டுமின்றி முன்னதாக கடந்த ஜனவரியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்ட ஆய்வின்படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட 12 மாநிலங்களில் குடிநீரில் யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
- இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
- சத்தீஷ்காரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அடங்கிய குழுவானது மாநிலத்தின் துபேடா பகுதியில் இருந்து நாராயணன்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் திடீரென வெடித்துச்சிதறியது.
இதில், இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இந்நிலையில், வீரர்கள் இரண்டு பேரின் உடல்களை அமைச்சர் டேங் ராம் வெர்மா தோளில் சுமந்தபடி சென்று இறுதி மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சத்தீஷ்காரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளே இல்லாத நிலையை உருவாக்குவதற்கான பணியை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
- மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அடங்கிய குழுவானது மாநிலத்தின் துபேடா பகுதியில் இருந்து நாராயணன்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் திடீரென வெடித்துச்சிதறியது.
இதில், இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- அதானி குழுமம் நிர்வகித்து வரும் பார்சா நிலக்கரி சுரங்க திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட உள்ளது.
- மரங்களை வெட்டுவதை தடுக்க முயற்சிக்கும் பழங்குடியினரைக் கட்டுப்படுத்த 350 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பழங்குடியினருக்கும் போலீசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஹஸ்டியோ வனப்பகுதியில் அதானி குழுமம் நிர்வகித்து வரும் பார்சா நிலக்கரி சுரங்க திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை எதிர்த்து பல மாதங்களாக அந்த வனப்பகுதியில் வசித்து வரும் மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் 6 கிராமங்களில் உள்ள சுமார் 5,000 மரங்களை அகற்ற அதிகாரிகள் முயன்றுள்ளனர்.
இதனை எதிர்த்து நேற்றைய தினம் [ வியாழக்கிழமை] பழங்குடியினர் பெரிய அளவில் திரண்டு போராட்டம் நடத்திய நிலையில் போலீசாருக்கும் பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
This video is from BJP ruled state Chhattisgarh, where Government is destroying Hasdeo Forest to complete an Adani Company Mining Deal, despite huge protest and opposition from the Tribals. The so called great Animal & Forest lover #LawrenceBishnoi & his gang are completely mum… pic.twitter.com/zUaklJYvwq
— Sourav Kundu (@souravramyani) October 18, 2024
இதற்கிடையே அதிகாரிகள் மரங்களை வெட்டும் பணியை துவங்கி உள்ள நிலையில் அங்கு வாழும் பழங்குடியினரைக் கட்டுப்படுத்த 350 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் பாஜக அரசின் ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இந்த பார்சா நிலக்கரித் திட்டத்தின் சுரங்க பணிகளை அதானி குழுமம் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பழங்குடியினர் தாக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சதீஷ்கர் ஆளும் பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- வெடிகுண்டு மிரட்டலால் 12 விமானங்களும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
- வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் புரளி என்று பின்னர் தெரிய வந்தன.
கடந்த 3 நாட்களில் இந்தியாவில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலால் 12 விமானங்களும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் புரளி என்று பின்னர் தெரிய வந்தன.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சத்தீஸ்கரை சேர்ந்த 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் ஒருவர் பெயர் நிர்பன் ஃபஸ்லுதீன் (33) என்றும் இன்னொரு நபர் 17 வயதான சிறுவன் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சிறுவன் கைது செய்யப்பட்ட ஃபஸ்லுதீனின் எக்ஸ் கணக்கை ஹேக் செய்து சமூக வலைத்தளங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் மும்பை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் சிறார் சிறைக்கு அடைக்கப்பட்டான். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக ஃபஸ்லுதீனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பல பகுதிகளை சேர்ந்த கிராமங்களுக்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டன.
- 36 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர்-தன்டேவாடா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஓர்ச்சா மற்றும் பர்சூர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கோவல், நெந்தூர், துள்துளி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேற்று தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இன்று நண்பகல் நெந்தூர் - துள்துளி அருகே உள்ள காடுகளில் என்கவுன்டர் நடந்தது. தீவிர எச்சரிக்கையுடன், காடுகளுக்குள் பின்வாங்கிய சில மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் பின்தொடர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், இதுவரை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 36 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது சமீபத்திய என்கவுண்டர்களில் பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றன.
துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து ஏ.கே. சீரிஸ் துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இந்த என்கவுண்டர் அமைந்துள்ளது.
- போலீசார் சிந்தவாகு அருகே வனப்பகுதியில் நக்சலைட்டுகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
- மறைந்து இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புபடையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
சத்தீஸ்கர்:
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் பாதுகாப்புப்படை வீரர்களின் உதவியுடன் தனிப்படை போலீசார் சிந்தவாகு அருகே வனப்பகுதியில் நக்சலைட்டுகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மறைந்து இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புபடையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.
இதில் 2 நக்சலைட்டுகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
- வீட்டில் படுக்கையில் நுழைந்த விஷப் பாம்பு கடித்துள்ளது.
- ரதியாவை கொன்ற விஷப்பாம்பை கூடையில் போட்டு பாதுகாத்து வைத்துள்ளனர்.
பாம்பு கடியால் உயிரிழந்த இளைஞரின் உடலை எரித்த சிதையில் கடித்த பாம்பையும் கிராம மக்கள் உயிருடன் உள்ளே வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா [Korba] மாவட்டத்திலுள்ள உள்ள பைகாமர்[Baigamar] கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு திகேஸ்வர் ரதியா என்ற 22 வயது இளைஞனை அவர் வீட்டில் படுக்கையில் நுழைந்த விஷப் பாம்பு கடித்துள்ளது.
உடனே மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரதியா நேற்று [ஞாயிற்றுக்கிழமை] காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ரதியாவை கொன்ற விஷப்பாம்பை கூடையில் போட்டு பாதுகாத்து வைத்துள்ளனர்.
ரதியாவின் உடல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்கு நடந்துள்ளது. அவரின் உடல் சிதையூட்டப்பட்ட போது கூடையில் பிடித்துவைத்திருந்த பாம்பை எடுத்து வந்து உயிருடன் எரியும் சிதையில் வீசியுள்ளனர். தகவலறிந்து போலீஸ் வந்து கேட்டதுக்கு அந்த பாம்பு மற்றவர்களையும் கடித்து விடுமோ என்று பாய்ந்து அப்படி செய்ததாக கிராமத்தினர் கூறியுள்ளனர்.