search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோடி"

    • OYO என்பது இந்தியாவில் முன்னணி பயண மற்றும் ஹோட்டல் முன்பதிவு தளம் ஆகும்.
    • தங்கள் உறவுக்கான சரியான ஆதாரத்தை வழங்க வேண்டும்.

    திருமணமாகாத ஜோடிகளுக்கு இனிமேல் அறை கிடையாது என்று OYO நிறுவனம் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இந்த விதியை OYO நிறுவனம் இந்த வருட தொடக்கம் முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.

    OYO என்பது இந்தியாவில் முன்னணி பயண மற்றும் ஹோட்டல் முன்பதிவு தளம் ஆகும். OYO மூலம் முன்பதிவு செய்யப்படும் விடுதிகளின் விதிகளை நிறுவனமானது திருத்தி அமைத்துள்ளது.

    இதன்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் உட்பட அனைத்து ஜோடிகளும் செக்-இன் செய்யும்போது, தங்கள் உறவுக்கான சரியான ஆதாரத்தை வழங்க வேண்டும்.

    மீரட்டில் இந்த நடைமுறைக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

    மீரட்டில் சமூக குழுக்களிடம் இருந்து வந்த கருத்துக்களுக்கு இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. OYO தளத்தை பயன்படுத்தி திருமணமாகாது ஆண்- பெண் உறவு வைத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து ஒன்று நிலவுவது குறிப்பிடத்தக்கது.

     

    • சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்
    • திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்

    சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

    இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், மகளிர் மட்டும் போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தார். அண்மையில் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல் தி கோர்' மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் 'ஷைத்தான்' படத்திலும் நடித்திருந்தார்.

    நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டில் வெளியாக உள்ளது.

    அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

    இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா - ஜோதிகா ஜோடி மீண்டும் இனியானது நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அந்த படத்தை சில்லு கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் அல்லது பெங்களூர் டேஸ் என்ற மலையாள படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

    விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜோதிகா - சூர்யா இருவரும் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
    • சினிமாவில் இருவரும் நடித்து வருவதால் உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஜிம் ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

    பிரபல நடிகை ஜோதிகா- நடிகர் சூர்யா இணைந்து 1999 -ம் ஆண்டு இயக்குனர் வசந்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் நடித்தனர்.

    சூர்யா- ஜோதிகா மொத்தம் 7 படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் 2006 -ல் திருமணம் செய்தனர், இவர்களுக்கு தியா என்ற மகள், தேவ் என்ற மகன் உள்ளனர்.

    இந்நிலையில் தற்போது ஜோதிகா ஷைத்தான் படத்தில் நடித்தார்.தற்போது மேலும் சில இந்தி படங்களில் ஜோதிகா நடிக்க உள்ளார். நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார்.




     

    இந்நிலையில் ஜோதிகா - சூர்யா இருவரும் ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்கும் வகையில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

    ஜோதிகா, சூர்யா இருவரும்  சிறந்த நடிகர்கள் மட்டும் அல்ல. உடற்தகுதி மீது வெறி கொண்டவர்கள். தற்போது சினிமாவில் இருவரும் நடித்து வருவதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம் ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு உள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் வியந்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுகதேவுக்கும், சுஷ்மா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
    • காதலர் தினத்தன்று தனது திருணமத்தை நடத்த திட்டமிட்டார்.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் செல்வக்குமார்-செல்வராணி தம்பதியர். இவர்களது மகன் சுகதேவ். இவர் இந்தியா ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுஷ்மா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இந்த நிலையில் சுகதேவ் சாதிமறுப்பு திருமணம் முடிவு செய்து, காதலர் தினத்தன்று தனது திருணமத்தை நடத்த திட்டமிட்டார்.

    அதன்படி நேற்று கோத்தகிரி மார்க்கெட் திடலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. விழாவுக்கு புஷ்பராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தந்தை பெரியார் திராவிட இயக்க பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் பங்கேற்று சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்தார்.

    இதில் கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, விடுதலை சிறுத்ைதகள் கட்சி மாவட்ட செயலாளர் மன்னரசன், மக்கள் அதிகாரம் ஆனந்தராஜ், சி.பி.எம் மணிகண்டன், மணிகண்டராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
    • இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாக்கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் கமலி (வயது 22). இவர் பி.எஸ்.சி படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன்ராஜ் (27).

    இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காதல் ஜோடி ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பாதுகாப்பு கேட்டு நேற்று ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இருதரப்பு பெற்றோரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததால் கமலியை அவரது கணவர் மோகன்ராஜ் உடன் அனுப்பி வைத்தனர்.

    பிரிட்டனில் வசிக்கும் ஜோடி திருமணம் செய்தாலும் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ள விருப்பம் இல்லாததால் டர்கி பாஸ்டர் முறையில் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.
    லண்டன்:

    இங்கிலாந்தில் நர்தம் பெர்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி கெர்ரி ஆலன்-அலி தாம்சன். கடந்த 2014-ம் ஆண்டு இவர்கள் 2 பேரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர். பின்னர் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தனர். அதே நேரத்தில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளாமல் குழந்தை பெற முடிவு செய்தனர்.

    அதுகுறித்து இணைய தளத்தில் தேடினர். அப்போது தான் ‘டர்கி பாஸ்டர்’ முறையின் மூலம் குழந்தை பெற முடியும் என தெரியவந்தது. அதன்பின்னர் 3 பவுண்டு (ரூ.300) செலவில் ஊசி ஒன்றை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கினர். அதன் பின்னர் ஊசியில் எடுக்கப்பட்ட அலி தாம்சனின் விந்தணுவை கெர்ரி ஆலனின் கர்ப்பபையில் செலுத்தினர்.

    இப்படி 4 முறை செய்த போது அவர் கர்ப்பம் அடையவில்லை. தொடர்ந்து 5-வது முறை செய்தபோது கர்ப்பம் அடைந்தார். அதை தொடர்ந்து கடந்த மே 23-ந்தேதி இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கெர்ரி ஆலன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். குடும்ப வாழ்வில் அதிகம் கஷ்டப்பட்டதால் திருமண வாழ்வில் அவருக்கு உடன்பாடு இல்லை. அலி தாம்சன் ஓரின சேர்க்கையாளர் என்பதால் திருமணம் செய்ய விரும்பவில்லை.

    எனவே தான் ‘டர்கி பாஸ்டர்’ முறையில் குழந்தை பெற்றனர். இந்த முறையில் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டிலேயே செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தைபெற முடியும்.
    ×