search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிவிஎஸ்"

    • டி.வி.எஸ். நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கி வருவதாக தகவல்.
    • ஜூப்பிட்டர் அல்லது XL மாடல்களில் ஒன்று எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    டி.வி.எஸ். நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் இருவாகன எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் டி.வி.எஸ். தனது புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.

    இது பற்றி தகவல் சமீபத்திய முதலீட்டாளர் சந்திப்பின் போது வெளியாகியுள்ளது. தற்போதைக்கு டி.வி.எஸ். நிறுவனம் ஐகியூப் மாடலை மட்டும் பல வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் ஓரளவுக்கு சந்தையில் வெற்றிகர மாடலாக உள்ளது.

    இதைத் தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவனம் எக்ஸ் ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. எனினும், இந்த மாடலின் வினியோகம் இதுவரை துவங்கவில்லை. டி.வி.எஸ். எக்ஸ் மாடல் தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் கவர்ச்சிகரமாக இருந்தது. இது விற்பனையில் அமோக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

     


    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டி.வி.எஸ். நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளையும் டி.வி.எஸ். துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாடல் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

    இதில் ஜூப்பிட்டர் அல்லது XL எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் ஒன்றை டி.வி.எஸ். முதலில் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இதில் XL எலெக்ட்ரிக் மாடல் வணிக பிரிவில் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. இதுதவிர ட.வி.எஸ். நிறுவனம் XL EV மற்றும் E-XL பெயர்களை புதிய மாடலுக்கு சூட்ட டிரேட்மார்க் செய்துள்ளது.

    • முராரி லால் என்பவர் ரூ.20,000 முன்பணம் செலுத்தி டிவிஎஸ் பைக் வாங்கியுள்ளார்.
    • ஜேசிபியை வாடகைக்கு எடுத்து பைக்கை தூக்கி கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்றார்.

    மத்தியபிரதேச மாநிலத்தில் டீக்கடைக்காரர் ஒருவர் ரூ.20,000 முன்பணம் செலுத்தி டிவிஎஸ் (TVS XL) பைக் வாங்கியதை ரூ.60,000 பணம் செலவழித்து கொண்டாடிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முராரி லால் என்பவர் சிவபுரி மாவட்டத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் ரூ.20,000 முன்பணம் செலுத்தி டிவிஎஸ் பைக் வாங்கியுள்ளார். பைக் வாங்கும் முன்பு டிஜே இசையுடன் வீட்டிலிருந்து நடனமாடிய படியே பைக் ஷோரூமிற்கு பைக்கை வாங்க சென்றுள்ளார்.

    அங்கு பைக்கை முன்பணம் கொடுத்து வாங்கிய பின்பு, ஜேசிபியை வாடகைக்கு எடுத்து பைக்கை தூக்கி கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டாடியுள்ளார்.

    தனது குழந்தைகளை மகிழ்ச்சியடையச செய்வதற்காக இவ்வாறு செய்ததாக முராரி லால் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    முராரி லால் இவ்வாறு செய்வது ஒன்றும் இது முதல் முறையல்ல. 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுக்கு 12,500 கடன் வாங்கி மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மொபைல் போன் வாங்கியதை கொண்டாட ரூ.25,000 செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாரம்பரியம் மிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன
    • ஒரு பேட்டரி சுமார் 10 கிலோ எடையுள்ளது என்பதை நினைவுபடுத்தினார் தருண்

    ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ.100 எனும் அளவில் விற்பனையாகிறது. இந்த விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வந்தவர்களுக்கு பேட்டரியை பயன்படுத்தி இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் (electric vehicle) நல்ல மாற்றாக உருவெடுத்தது.

    ஏத்தர், ஓலா போன்ற புது நிறுவனங்களும், வாகன தயாரிப்பில் பாரம்பரியம் மிக்க பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் போன்ற நிறுவனங்களும் தங்கள் மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

    இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம், ஏத்தர்.

    வளர்ந்து வரும் இத்துறையில் அடுத்த முன்னெடுப்பாக சார்ஜ் குறைந்தவுடன் தங்கள் இரு சக்கர வாகனத்தில் உள்ள பேட்டரியை, நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் பரிமாற்றி (battery swapping) கொள்ளும் வசதியை ஆங்காங்கே ஏற்படுத்த சில நிறுவனங்கள் முனைந்து வருகின்றன. இவ்வசதியை ஒரு சிறப்பு அம்சமாக கூறி வாகன விற்பனையும் நடந்து வருகிறது.

    ஆனால், இந்த முயற்சியை ஏத்தர் நிறுவன தலைமை செயல் அதிகாரி (CEO) தருண் மேத்தா (Tarun Mehta) விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

    ஒரு பேட்டரி என்பது 10 கிலோ எடைக்கு குறையாமல் இருக்கும். அதனை மாற்றி பொருத்தும் போது கீழே போட்டு விட கூடாது. வயதானவர்களுக்கு இப்பணி எளிதில்லை. அவர்களுக்கு உதவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு மாற்றலுக்கான பணியகத்தில் 200 பேட்டரிகளாவது எப்போதும் முழு சார்ஜுடன் இருக்க வேண்டும். இதற்கு பெரிய பரப்பளவிலான இடம் தேவைப்படும். இந்த பேட்டரிகள் அனைத்தும் விலையுயர்ந்தவை என்பதால் அவற்றை பாதுகாக்க இரவும் பகலும் பணியில் இருக்கும் பாதுகாப்பாளர்களை நியமிக்க வேண்டும். இவையனைத்தும் செலவினங்களை கூட்டி விடும். இதை தவிர, ஒரு புது எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை வாங்கியவர், சார்ஜிங் நிலையத்தில் உள்ள பழைய பேட்டரியுடன் தனது புது பேட்டரியை பரிமாற்றி கொள்ள தயங்குவார். எனவே நாங்கள் இத்திட்டத்தை பெரிதாக ஆதரிக்கவில்லை.

    இவ்வாறு தருண் கூறியுள்ளார்.

    • அமேசான் நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
    • கூட்டணியின் அங்கமாக ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அமேசான் தனது டெலிவரி பணிகளுக்காக பயன்படுத்த இருக்கிறது.

    அமேசான் இந்தியா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் இடையே புது கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தத்தின் படி அமேசான் இந்தியா நிறுவனம் டிவிஎஸ் நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி பணிகளில் பயன்படுத்த இருக்கிறது.

    இந்திய சாலைகளில் 2025 வாக்கில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த ஒப்பந்தம் மூலம் திட்டத்தை செயல்படுத்த அமேசான் முடிவு செய்துள்ளது. எனினும், டெலிவரிக்கு பயன்படுத்தப்பட இருக்கும் ஐகியூப் மாடல்களின் சரியான வேரியண்ட் எது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    டெலிவரி பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதால் அமேசான் நிறுவனம் எண்ட்ரி லெவல் ஐகியூப் மாடலை வாங்கலாம் என கூறப்படுகிறது. டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஸ்கூட்டரில் உள்ள எல்லா வசதிகளும் பயன்தராது. எனினும், இவ்வாறு செய்யும் போது ரேன்ஜ் மற்றும் சார்ஜிங் நேரம் உள்ளிட்டவை கவலை அளிக்கும் பிரச்சினையாக இருக்கும்.

    இதனை எதிர்கொள்ள டிவிஎஸ் நிறுவனம் அமேசானுக்காக அதிக ரேன்ஜ் மற்றும் செயல்திறன் வழங்கும் ஐகியூப் வேரியண்டை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தம் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு மேலும் அதிகரிக்க செய்யும் என்றே தெரிகிறது.

    ×