என் மலர்
நீங்கள் தேடியது "டெக்சாஸ்"
- 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும்
அமெரிக்காவைச் சேர்ந்த உலக பணக்காரரும் முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.
விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமீபத்தில் அவர் சொந்தமாக்கிக்கொண்ட சமூக வலைதளமான எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் -இல் அவர் அளித்த பேட்டியில் தனது இந்த 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை மற்றொரு அமெரிக்க மாகாணமான டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு சட்டத்தின்படி, பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் பாலினம் மற்றும் பெயரை பள்ளித் தரவுகளில் மாற்றினால் அதை ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. இது LGBTQ+ மாணவர்களுக்கான தனியுரிமையாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தாலும், இதற்கு முன்பு சமீப காலங்களாக கொண்டுவரப்பட்ட வெவ்வேறு சட்டங்களாலும் குடும்பங்களும் நிறுவனங்களும் பெறும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதுவதால் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக மஸ்க் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது கலிபோர்னியாவின் ஹாத்ரோன் [HAWTHRONE] பகுதியில் செயல்பட்டு வரும் இரு நிறுவனங்களும் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் மாகாணங்கள் சுயாட்சி பெற்று இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயலில் சிக்கி இதுவரை பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், 3 பேர் காற்றில் வேரோடு பெயர்ந்து விழுந்த மரங்களுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர். அதில் பெண் ஒருவர் மரத்துக்கு அடியில் இருந்த தனது காரை நகர்த்த சென்றபோது அவர் மீது மரம் பெயர்ந்து விழுந்துள்ளது. சிமெண்ட் டிரக்கில் அமர்ந்திருந்த 73 வயது முதியவர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மணிக்கு 80 மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதில் கட்டிடங்களின் ஜன்னல்களும் கதவுகளும் சுக்குநூறாக உடைந்தன.
நகரத்தில் சுமார் 1 மில்லியன் குடியிருப்புகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. அவசர எண்களுக்கான அனைத்து தொடர்புகளும் துடிக்கப்பட்டதால் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களை மீட்க்கும் பணியில் மீட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்புகளை சரி செய்யும் பணிகளை நகர நிர்வாகம் துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. புயல் காற்றில் கட்டடங்கள் சேதமடையும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
- குடிபெயர்ந்தவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி வெளியேற ஒத்துக் கொள்ள வேண்டும்.
- இல்லையெனில் சட்டவிரோதமாக நுழைந்ததாக வழக்கு தொடரப்படும்.
அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ளது மெக்சிகோ நாடு. தென்அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேற விரும்புபவர்கள் மெக்சிகோ எல்லை வழியாகத்தான் ஊடுருவி வருகிறார்கள்.
இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால்தான் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இரு நாடுகளின் எல்லையில் சுவர் எழுப்ப இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் டெக்சாஸ் மாநிலம் புதிய குடியேற்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் மூலம் மெக்சிகோவில் இருந்து குடிபெயர்ந்தவர்களை உடனடியாக அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடியும். இந்த சட்டத்திற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.
இந்த சட்டத்தின்படி, டெக்சாஸ் மாநிலத்திற்கு குடிபெயரும் நபர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற முடியும். அல்லது சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக வழக்கு தொடர முடியும்.
ஆனால், டெக்காஸ் மாநிலத்தின் இந்த புதிய குடியேற்ற சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என மெக்சிகோ தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் "எந்தவொரு சூழ்நிலையிலும் டெக்சாஸ் மாநிலத்தால் திருப்பு அனுப்படுவதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளது.
- இயந்திர நுரையீரலுக்குள் 70 ஆண்டுகள் வாழ்ந்த அவர், கல்லூரி படிப்பை முடித்து வழக்கறிஞராக மாறினார்
- போலியோ ஒரு நபரின் முதுகுத் தண்டுவடத்தை பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்தும்
அமெரிக்காவில் 1952 ஆம் ஆண்டு பால் அலெக்சாண்டர் என்பவர் தனது 6-வது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரது கழுத்துக்கு கீழ் உள்ள பாகங்கள் செயல் இழந்து முடங்கினார். இதனையடுத்து சுவாசிக்க முடியாமல் அவர் சிரமப்பட, டெக்சாஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு அவசர மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் 600 பவுண்டுகள் (272 கிலோ கிராம்) எடையுள்ள இயந்திர நுரையீரலின் உதவியுடன் அவர் உயிர் பிழைத்தார். பின்பு வாழ்நாள் முழுவதும் அந்த உலோகக் கட்டமைப்பிற்குள் வாழ வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
இப்படி 70 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அவர் நேற்று (மார்ச் 12) உயிரிழந்துள்ளார். இயந்திர நுரையீரலுடன் 70 ஆண்டுகள் வாழ்ந்த அவர், கல்லூரி படிப்பை முடித்து வழக்கறிஞராக மாறினார். பின்னர் எழுத்தாளராக ஆனார். இவரின் கதை உலகம் முழுவதும் உள்ள மக்களை ஈர்த்தது.
பால் அலெக்சாண்டர் இறப்பு குறித்து பேசிய அவரது சகோதரர் பிலிப், "எனது சகோதரரின் நிதி திரட்டலுக்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது அவரது கடைசி சில வருடங்களை மன அழுத்தமின்றி வாழ அனுமதித்தது" என தெரிவித்துள்ளார்.
போலியோ வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவுகிறது. போலியோ ஒரு நபரின் முதுகுத் தண்டுவடத்தை பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்தும்.