search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்னிஸ்"

    • பிரெஞ்ச் ஓபனை மட்டும் 14 முறை வென்றுள்ளார்.
    • அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் தலா இரண்டு முறை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    டென்னிஸ் விளையாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் தலைசிறந்த வீரராக கருதப்படும் மூன்று வீரர்களில் ஒருவராக ரபேல் நடால் திகழ்ந்தார். பெடரர் மற்றும் ஜோகோவிச் ஆகியோருடன் இணைந்து தலைசிறந்த வீரராக பார்க்கப்படுகிறார்.

    கிராண்ட்ஸ்லாம்

    இடது கை பழக்கம் கொண்ட நடால் ஏடிபி தரவரிசையில் 209 வாரங்கள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தவர். ஐந்து முறை முதல் இடத்தை வகித்துள்ளார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். குறிப்பாக பிரெஞ்ச் ஓபனை மட்டும் 14 முறை வென்றுள்ளார்.

    கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அதிகமுறை வென்றவராக இருந்த பெடரர் (20) சாதனையை முறியடித்தார். தற்போது ஜோகோவிச் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். நடால் 22 கிராண்ட்ஸ்லாம் இடங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    கடந்த 2010-ல் பிரெஞ்ச ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய மூன்றையும் தனது 24 வயதில் வென்றார். 2008-ல் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்றார். 24 வயதில் (மிகவும் இளம் வயதில்) மூன்று மாறுபட்ட மைதானங்களில் (Courts) சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    2005-ல் பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்தார். 2022-ல் ஆஸ்திரேலிய ஓபனை வென்றதன் மூலம் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தலா இரண்டு முறை வென்ற வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

    ஐந்து செட்களை கொண்ட 391 போட்டிகளில் 345 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். சராசரி 88.23 சதவீதம் ஆகும்.

    ஒற்றையர் சாம்பியன் பட்டம்

    ஏடிபி ஒற்றையர் பிரிவில் 36 மாஸ்டர்ஸ் டைட்டில், ஒலிம்பிக் மெடல் உள்பட 92 பதக்கங்கள் வென்றுள்ளார். இதில் 63 டைட்டில் Clay Courts-ல் வென்றதாகும். செம்மண் தரையில் (Clay Courts) முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.

    20 வருடங்கள் டென்னிசில் சிறந்த வீரராக திகழ்ந்தார். 20 வயதிற்குள் தரவரிசையில் 2-வது இடம் மற்றும் 16 ஏடிபி டூர் டைட்டில் வென்று அசத்தியவர்.

    ஆஸ்திரேலிய ஓபன்

    ஆஸ்திரேலிய ஓபனை 2009 மற்றும் 2022 ஆகிய இரண்டு முறை வென்றுள்ளார்.

     பிரெஞ்ச் ஓபன்

    பிரெஞ்ச் ஓபனை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020, 2022 ஆகிய 14 முறை வென்றுள்ளார். இதில் இரண்டு முறை தொடர்ந்து 4 முறையும், ஒரு முறை தொடர்ந்து ஐந்து முறையும் வென்றுள்ளார்.

     பிரெஞ்ச் ஓபனில் மூன்று முறை (2012, 2014, 2022) ஜோகோவிச்சை வீழ்த்தியுள்ளார். 2006 முதல் 2008 வரை தொடர்ந்து மூன்று முறை ரோஜர் பெடரரை வீழ்த்தியுள்ளார். 2011-ம் ஆண்டும் ரோஜர் பெடரரை வீழ்த்தியுள்ளார்.

    விம்பிள்டன்

    விம்பிள்டன் ஓபனை 2008 மற்றும் 2010 ஆகிய இரண்டு முறை வென்றுள்ளார்.

     அமெரிக்க ஓபன்

    அமெரிக்க ஓபனை 2010, 2013, 2017 மற்றும் 2019 என நான்கு முறை வென்றுள்ளார்.

     ஓய்வு அறிவிப்பு

    38 வயதாகிய ரபேல் நடால் இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற டேவிஸ் கோப்பை காலிறுதி போட்டியுடன் ஓய்வு பெற்றார். தனது கடைசி போட்டியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    2004, 2008, 2009, 2011, 2019 ஆகிய டேவிஸ் கோப்பையை ஸ்பெயின் அணிக்காக வென்றுள்ளார். ஆனால் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரட்டை பிரிவில் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது.

    • சென்னை ஸ்மாஷா்ஸ் 54-46 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு எஸ்ஜி பைப்பா்ைச வீழ்த்தியது.
    • சென்னை அணி 3-வது போட்டியில் ராஜஸ்தான் ரேஞ்சர்சை இன்று மாலை 5.30 மணிக்கு எதிர் கொள்கிறது.

    மும்பை:

    இந்திய டென்னிஸ் சம்மேளனம் சார்பில் 6-வது சீசனுக்கான பிரீமியர் லீக் டென்னிஸ் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.

    முதல் போட்டியில் சென்னை ஸ்மாஷா்ஸ் 54-46 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு எஸ்ஜி பைப்பா்ைச வீழ்த்தியது.

    சென்னை ஸ்மாஷர்ஸ் 2-வது ஆட்டத்தில் நேற்று ஐதராபாத் ஸ்டிரைக்கர்சை எதிர் கொண்டது. இதில் சென்னை அணி 45-55 என்ற கணக்கில் போராடி தோற்றது. சென்னை அணி 3-வது போட்டியில் ராஜஸ்தான் ரேஞ்சர்சை இன்று மாலை 5.30 மணிக்கு எதிர் கொள்கிறது.

    • கடைசி போட்டி அவரது சொந்த மண்ணிலேயே நடைபெற்றது.
    • உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

    வியன்னா ஓபன் 2024 தொடரின் முதல் போட்டியில் இத்தாலியை சேர்ந்த லூசியானோ டார்டெரியை டொமினிக் தீம் எதிர்கொண்டு விளையாடினார். இந்தப் போட்டியில் டார்டெரி 7-6 (6), 6-2 என்ற கணக்கில் டொமினிக்-ஐ வீழ்த்தினார். 91 நிமிடங்கள் நீடித்த போட்டியில் தோல்வியை தழுவியதை அடுத்து தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டொமினிக் தீம் அறிவித்தார்.

    முன்னாள் உலகின் நம்பர் 1 வீரராக இருந்த டொமினிக் தீம் 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டம் வென்று அசத்தினார். அதன்பிறகு மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனோடு ஓய்வு பெறும் கட்டாயத்திற்கு டொமினிக் தள்ளப்பட்டார். அந்த வகையில், அவர் விளையாடிய கடைசி போட்டி அவரது சொந்த மண்ணிலேயே நடைபெற்றது.

    ஓய்வு பெற்ற டொமினிக் தீம்-க்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இந்த போட்டி வியன்னாவில் உள்ள ஸ்டட்ஹாலே அரீனாவில் நடைபெற்றது. போட்டிக்கு பிறகு பேசிய டொமினிக் தீம், "கடந்த சில மாதங்களில் பல அருமையான குட்-பைக்களை கடந்து வந்துள்ளேன், ஆனால் இன்று உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.

    • ரஃபேல் நடால் பிரபல ஸ்பெயின் டென்னிஸ் வீரராவர்.
    • இதுவரை 22 முறை கிராண்ட் ஸ்லாம் விருதை வென்றுள்ளார்.

    ரஃபேல் நடால் பிரபல ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ஆவார். இதுவரை 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இவர் தற்பொழுது அவரது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அது ரஃபேலின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அதில் அவர் "நான் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். கடைசி இரண்டு வருடம் மிகவும் கடினமாகவே இருந்தது. என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது என தோன்றியது. இந்த முடிவு அனைவரும் ஒரு நாள் எடுக்கதான் செய்ய வேண்டும், இந்த முடிவை எடுப்பதற்கு மிகவும் கடினமாகதான் இருந்தது."

    "இந்த வாழ்க்கையில் அனைத்திற்கும் தொடக்கமும் முடிவும் உள்ளது. என்னுடைய இறுதி போட்டியை நான் என்னுடைய நாட்டிற்காக டேவிஸ் கோப்பைக்காக விளையாடவுள்ளேன். அனைவருக்கும் நன்றி. என்னுடைய சக வீரர்கள், என்னுடைய அணி, அம்மா, அப்பா, மாமா, என்னுடைய மனைவி கடைசியாக என்னுடைய ரசிகர்களாகிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்," என மிக உருக்கமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • போட்டியில் அணிந்திருந்த ஆடையால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார்.
    • கால் சட்டையை சுற்றிலும் அலங்கரிப்பு வேலைகள் செய்யப்பட்டு இருந்தன.

    இரண்டு ஆண்டுகள் கழித்து நவாமி ஒசாகா அமெரிக்க ஓபன் தொடரில் களமிறங்கினார். ஜெலனா ஒஸ்டாபென்கோவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நவாமி இந்த போட்டியில் அணிந்திருந்த ஆடையால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார்.

    நியான் கிரீன் நிற ஆடை அணிந்து களத்திற்குள் என்ட்ரி கொடுத்த நவாமி போட்டி துவங்குவதற்கு முன்பே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். வழக்கமான டென்னிஸ் ஆடையை சற்று மறு வடிவமைப்பு செய்த நவோமா, ஜாக்கெட்-ஐ அலங்கரித்து அணிந்திருந்தார். இத்துடன் கால் சட்டையை சுற்றிலும் அலங்கரிப்பு வேலைகள் செய்யப்பட்டு இருந்தன.

    இவர் அணிந்திருந்த ஆடையை பின்புறம் இருந்து பார்த்தால் பட்டாம்பூச்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஜாக்கெட்டில் நீண்ட டை இணைக்கப்பட்டு இருந்தது. இதே போல் கால் சட்டையில் சிறு சிறு மடிப்புகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இருந்தன. தனது ஆடை போட்டியில் எந்த இடையூறும் ஏற்படுத்தாத வகையில் பார்த்துக் கொண்ட நவாமி வெற்றி வாகை சூடினார்.



    • ஜோகோவிச் 24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
    • பெண்கள் பிரிவில் இகா ஸ்வியாடெக் சபலென்கா, ரைபகினா, கோகோ கவூப் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் பட்டத்தை அல் காரஸ் (ஸ்பெயின்) வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை சின்னர் (இத்தாலி) கைப்பற்றினார். பெண்கள் பிரிவில் சபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபனையும், இகா ஸ்வியாடெக் (போலந்து) பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், பார்பரா கிரஜ்கோவா (செக் குடியரசு) விம்பிள்டன் பட்டத்தையும் வென்றார்கள்.

    ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நாளை (26-ந்தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 8-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோ கோவிச் (செர்பியா), சின்னர் அல்காரஸ், அலெக் சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), மெட்வதேவ், ரூப லெவ் (ரஷியா) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஜோகோவிச் 24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார். 25-வது பட்டத்துக்காக அவர் காத்திருக்கிறார்.

    பெண்கள் பிரிவில் இகா ஸ்வியாடெக் சபலென்கா, ரைபகினா, கோகோ கவூப் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    • ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
    • தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் விளையாட்டு என்பதையும் கடந்து வீரர்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதாக உள்ளது. வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அது அழுகையாக வெளிப்படுகிறது. இது ரசிகர்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.

    அந்த வகையில் செர்பிய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் இடையே நடந்த போட்டியானது அத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று நடந்த இந்த டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    சில மாதங்களுக்கு முன் நடந்த விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரஸிடம் ஜோகோவிச் தோற்ற நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டி அமைந்தது. இது இரு வீரர்களையும் உணர்ச்சி வசப்பட வைப்பதாக அமைந்தது.

    பார்வையாளர்கள் இடத்தில் இருந்த தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் தோல்வியால் கார்லோஸ் அல்காரஸ் கண்கலங்கும் காட்சிகளும் ரசிகர்களைக் கலங்க வைத்துள்ளது. 

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் செர்பியா வீரர் ஜோகோவிச் வென்றார்.
    • ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் வென்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் சீன வீராங்கனை வென்றார்.
    • குரோசியா வீராங்கனை வெகிக் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனா வீரங்கனை குயின்வென் ஜெங், குரோசியா வீராங்கனை வெகிக்குடன் மோதினார்.

    இதில் ஜெங் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். குரோசிய வீராங்கனை வெகிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி தங்கம் வென்றது
    • தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி 6-2, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் சீனாவில் வாங் சின்யு மற்றும் ஜாங் ஜிசென் ஜோடியை தோற்கடித்து தங்கம் வென்றனர்.

    தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    2021 ஆம் ஆண்டு முதல் கேத்தரினாவும் மச்சாக்கும் காதலித்து வந்தனர். பாரிஸ் ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு அவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். பிரேக் அப் செய்திருந்தபோதும் நாட்டுக்காக கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாட இருவரும் சம்மதித்தனர்.

    பிரேக் அப் செய்து கொண்ட காதல் ஜோடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்று முத்தமிட்டுக் கொண்டது இணையத்தில் பேசுபொருளானது.

    தங்கம் வென்ற பின்பு பேசிய கேத்தரினா, " நீங்கள் குழப்பம் அடைவதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை" என்று சிரித்தபடியே தெரிவித்தார்.

    இதனையடுத்து தங்களின் உறவு குறித்து பேசிய மச்சாக், "டாப் சீக்ரெட்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா ஜோடி வென்றது.
    • இங்கிலாந்து ஜோடி தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன்-ஜான் பீர்ஸ் ஜோடி, இங்கிலாந்தின் ராஜீவ் ராம்-ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியுடன் மோதியது.

    இதில் ஆஸ்திரேலியா ஜோடி 6-7 (6-8), 7-6 (7-1), 10-8 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது.

    இதில் மேத்யூ எப்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜோகோவிச் முதன்முறையாக ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
    • விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் நேர் செட்களில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் உடன் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் மோதவுள்ளார்.

    அரையிறுதி போட்டியில் கனடா வீரர் பெலிக்ஸ் ஆகரை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று கார்லோஸ் அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை 6-4, 6-2, என்ற நேர் செட்களில் வென்று நோவக் ஜோகோவிச் இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    25 க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் முதன்முறையாக ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் நேர் செட்களில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் அல்காரஸை வென்று ஜோகோவிச் பழி தீர்ப்பாரா என்று அவரது ரசிகர்கள் இப்போட்டியை ஆர்வத்துடன் உற்று நோக்கியுள்ளனர்.

    வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி மற்றும் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் ஆகியோர் போட்டி போடுகின்றனர்.

    ×