என் மலர்
நீங்கள் தேடியது "டெய்லர்"
- சென்னிமலை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் டெய்லர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த மணிமலைகரடு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (32). இவரது மனைவி சங்கீதா. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் செல்லமுத்து தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக செல்லமுத்து மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு செல்லமுத்து திடீரென வீட்டை உள்புறமாக தாழிட்டு வீட்டில் அறையில் தூக்கு போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று செல்லமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செல்லமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் செல்லமுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மதுரை அருகே டெய்லர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எல்.பொத்தானிபட்டி பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 32). டி.கல்லுப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகாததால் இவர் விரக்தியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கே.பரமன்பட்டி அருகே சென்னம்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு பெற்றோரை பார்ப்பதற்காக பவுன்ராஜ் சென்றார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தைக் குடித்து மயங்கிக் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவுன்ராஜின் தாய் சின்னம்மாள் சேடப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடையில் தீப்பிடித்து டெய்லர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
அவனியாபுரம் ஆசீர்வாதம் நகரைசேர்ந்தவர் செல்வகுமார் (57).இவர் காமராஜர்சாலை முனிச்சாலை பஸ் நிறுத்தம் அருகே டெய்லர்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடையில் சாமிகும்பிட்டு பூஜை நடத்திக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பற்றியது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மகன் ஹரிஸ் கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்
- வீட்டிலிருந்து பனியன் நிறுவனத்திற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
- ரோட்டோரம் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பேபி(வயது 40). இவருக்கு ராணி என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி இரவு வீட்டிலிருந்து பனியன் நிறுவனத்திற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கணபதிபாளையம் - திருப்பூர் ரோட்டில் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிள் சென்னிமலைபாளையம் என்ற இடம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- அக்கம் - பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் ஓட்டல் கடை மாஸ்டரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
- பல்லடம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி பொன் நகர் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் கணேசன்(வயது 53) இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டல் கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இவரது அறை நீண்ட நேரம் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த இவரது மனைவி புனிதா சென்று பார்த்த போது, வீட்டின் மேற்கூரை விட்டத்தில், தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம் - பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து புனிதா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(37). இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், 14 வயதில் மகள், 11 வயதில் மகன் ஆகியோர் உள்ளனர். இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக, இவர் நோய்வாய்ப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வீட்டில் தனியே இருந்த அவர் வீட்டின் மேற்கூரை விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்று இருந்த அவரது மனைவி வீடு திரும்பிய நிலையில், கணவர் தூக்கு போட்டு தொங்குவதைக் கண்டு அலறி துடித்ததுடன், அக்கம் - பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றார் .அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம், கிரஷ்கா பகுதியைச் சேர்ந்த அக்சைய்நாயக் (35) என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த ரூநிலடா நாயக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தனது மனைவி ரூநில்டா நாயக்கை பிரிந்து அக்சை நாயக் மட்டும் வெள்ளகோவில் அருகே உள்ள நடுப்பாளையம் என்ற இடத்தில் இருக்கும் நூல் மில்லில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் ஒடிசா சென்று தனது மனைவி மற்றும் 4 வயது மகளையும் அழைத்துக் கொண்டு வந்து மில் வளாகத்தில் குடியிருந்து வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அக்சைய் நாயக் மற்றும் மனைவி மகள் ஆகியோர் மில் வளாகத்தில் உள்ள கேண்டினில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ரூநில்டா முன்னரே சாப்பிட்டுவிட்டு தான் தங்கியிருக்கும் அறைக்கு தனது மகளை அழைத்துக் கொண்டு வேகமாக சென்று தனது மகளை அறைக்கு வெளியே நிற்க சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்.இதையறிந்த 4 வயது மகள் சத்தம் போட்டு உள்ளார். சத்தத்தை கேட்ட அக்சைய் குமார் மற்றும் உடன் பணியாற்றுவோர் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ரூநில்டா மின்விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போது பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இது சம்பந்தமாக காங்கேயம் போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.டெய்லர் உள்பட 3பேர் தற்கொலை
- சேலத்தில் டெய்லர் வீட்டில் நூதன முறையில் தங்க நகைகள் கொள்ளை போனது.
- வீட்டைப் பூட்டிக்கொண்டு சாவியை வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறை பகுதியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் ராஜா வீதி பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மனைவி எஸ்தர் (வயது 40).
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 10 மணி அளவில் வீட்டைப் பூட்டிக்கொண்டு சாவியை வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறை பகுதியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கச் செயின், கம்மல்கள், மோதிரம், தங்க காசு, ஆகிய 19 கிராம் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து எஸ்தர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.