என் மலர்
நீங்கள் தேடியது "தலைமுடி"
- பள்ளிக்கு தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை ஆசிரியர் சாய் பிரசன்னா வெட்டியுள்ளார்.
- இது குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்று ஆசிரியர் சாய் பிரசன்னா மாணவிகளை மிரட்டியுள்ளார்.
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டி தண்டனை கொடுத்த ஆசிரியரின் செயல் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் கேஜிபிவி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு காலையில் தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை ஆசிரியர் சாய் பிரசன்னா வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்று ஆசிரியர் சாய் பிரசன்னா மாணவிகளை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இது தொடர்பாக தெரிவித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாணவிகளிடம் ஒழுக்கத்தை வளர்க்கவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக ஆசிரியர் சாய் பிரசன்னா தனது செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
- குளோரின் கலந்த நீரில் அதிகம் குளிப்பது தலைமுடியை வறட்சியடையச் செய்யும்.
- ஹேர் ட்ரையர் பயன்படுத்தும்போது அதிகம் சூடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தலைமுடி பிரச்சனையில் தலைமுடி வெடிப்பும் ஒன்று. சூரிய ஒளி, தூசி, சுற்றுப்புறத் தூய்மையின்மை போன்ற காரணங்களாலும் தலைமுடி வறண்ட தன்மையை அடைந்து வெடிப்படையும்.
* தலைமுடிக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். தலைக்கு குளிக்க வேண்டும். தலையில் அழுக்கு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
* குளோரின் கலந்த நீரில் அதிகம் குளிப்பது தலைமுடியை வறட்சியடையச் செய்யும்.
* தலைமுடியை சீவுவதற்கு தரமான சீப்பை பயன்படுத்தவும். தலை குளித்தவுடனேயே தலை சீவக்கூடாது. இதனால் முடி உடையும்.
* தலைமுடிக்கு கெமிக்கல் நிறைந்த ஷாம்பு பயன்படுத்த வேண்டாம். சிக்கு எடுக்க பெரிய பல் இருக்கும் சீப்பை பயன்படுத்த வேண்டும்.
* தலைமுடியை ஸ்ட்ரெய்ட் செய்யும்போது தலைமுடி ஈரமாக இருக்க கூடாது. இது முடி வெடிப்பிற்கு காரணமாகிவிடும்.
* ஹேர் ட்ரையர் பயன்படுத்தும்போது அதிகம் சூடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தலைமுடி பராமரிப்பது போலவே அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்க உள்ளிருந்து சரிசெய்ய வேண்டும். நாமும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
* ரசாயனங்களால் தயாரிக்கப்படும் கலரிங் பொருள்களை உபயோகித்தாலும் முடியின் நுனிகளில் வெடிப்புகள் உருவாகும்.
- கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.
- தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.
இன்றைய சூழலில் இளநரையால் ஆண்கள், பெண்கள், ஐந்து வயது குழந்தைகூட பாதிப்புக்குள்ளாகிறது. இளநரைக்கு மரபைவிட பிற காரணிகளே முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுமுறை காரணங்களாகும். இதில் மரபு சார்ந்து இளநரை ஏற்பட்டால், அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது.
* தலைமுடிக்கு தினமும் எண்ணெய் வைத்து பராமரித்தால், இளநரையை எளிதில் தடுக்கலாம். தலை வழுக்கையாவதையும் தடுக்கலாம். தலைமுடியும் அடர்த்தியாகும்.
* உணவில் கடுக்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
* தினம் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாறு பருகுவது தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது.
* சீரகம், வெந்தயம், மிளகை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரை குறையும்.
* கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.
* நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாரம் இருமுறை தலையில் தடவி வர இளநரை குறையும்.
* கரிசலாங்கண்ணி சாறு, கடுக்காய் தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
* கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயம் உணவில் சேர்த்துக் கொள்வது இளநரை ஏற்படாமல் காக்கும்.
* தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.
* மிளகு தூளை தயிரில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளித்து வரலாம்.
* அவுரிப் பொடியை மருதாணியுடன் சேர்த்து தலைக்கு தடவி குளிப்பதால் இளநரை நிறம் மாறத்தொடங்கும்.
- முடி உதிர்தல் பிரச்சனை இருப்பர்கள் தலையில் சீப்பை பயன்படுத்த மாட்டார்கள்.
- தலைமுடியை வாராமல் விடும்போது முடி சிக்கலாகும்.
தலைமுடியை தினமும் முறையாக வாருவது பல நன்மைகளை அளிக்கிறது. ஆரோக்கியமான முடியை பெற தினமும் தலைமுடியை வாருவது அவசியமாகும்.
முடி உதிர்தல் பிரச்சனை இருப்பர்கள் தலையில் சீப்பை பயன்படுத்த மாட்டார்கள். தலைமுடியை வாருவதற்கு சீப்பு பயன்படுத்துவது பாதுகாப்பு நடைமுறை மட்டுமல்ல அறிவியல் ரீதியான நன்மைகளையும் கொண்டுள்ளது. தலைமுடியை வாருவதால் கிடைக்கும் நன்மைகள்:
* தலைமுடியை வாரும்போது சீப்பு மண்டை ஓட்டுப்பகுதியில் உராய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
* தலையில் இயற்கையான எண்ணெய் உற்பத்தியாகவும் அது அனைத்து பகுதியில் சீராக பரவவும் உதவும்.
* தலைப்பகுதியில் உள்ள இறந்த செல்களை நீக்க இது உதவும். இதனால் புது செல்கள் உற்பத்தியாகி தலைமுடி நன்கு வளரும்.
* சிலர் விடுமுறை நாள்களில் போட்ட பின்னலை (அ) கொண்டையை அவிழ்க்கவே மாட்டார்கள். தலைமுடியை வாராமல் விடும்போது முடி சிக்கலாகும். மேலும் வியர்வை தேங்கி, பிசுபிசுப்பு உண்டாகும்.
* தலைமுடியை வாராமல் இருப்பதால் பொடுகுத்தொல்லை, பேன் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
- அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர்.
- சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கோர்ட்டு அலுவலகம் கட்ட மாநில அரசு முடிவு செய்தது.
பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளது.
புதிய கட்டிடத்திற்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விரட்டியடித்தனர்.
அப்போது கல்லூரி மாணவி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பைக்கில் வந்த 2 பெண் போலீசார் மாணவியை துரத்தி சென்றனர்.
மாணவியின் அருகில் சென்ற பெண் போலீஸ் ஒருவர் மாணவியின் நீண்ட தலை முடியை பிடித்து கொண்டார். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.
கீழே விழுந்த மாணவியின் தலைமுடியை பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்துக் கொண்டு பைக்கை ஓட்டி சென்றனர்.
இதனால் மாணவி சிறிது தூரம் தரையில் விழுந்து உரசியபடி சென்றதால் காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சில மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் இந்த சம்பவம் ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இதுகுறித்து மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார்.
- சுருள் முடி ஸ்டைல் செய்வது என வித்தியாசமான அலங்காரத்தை விரும்புகின்றனர்.
- பயனர்கள் அந்த வாலிபரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சமீபகாலமாக இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் தங்களது தலைமுடிக்கு கலர் அடிப்பது, சுருள் முடி ஸ்டைல் செய்வது என வித்தியாசமான அலங்காரத்தை விரும்புகின்றனர்.
அந்த வகையில் தற்போது எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் கியாஸ் லைட்டரை பயன்படுத்தி சுருள் முடி ஸ்டைல் உருவாக்கும் 'டெக்னிக்' பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதில், வாலிபர் கியாஸ் லைட்டரை லேசான தீயில் சூடாக்குகிறார். பின்னர் அதனை தலைமுடியில் வைத்து அதன்மீது முடியை சுற்றுவதன் மூலம் அழகான சுருள் முடி வடிவம் கிடைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் அந்த வாலிபரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.
- மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.
சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.லக்னோ:
உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரை சேர்ந்த சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் (வயது 15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால், மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்த சாஹல், தனது பெற்றோரிடம் அவற்றை நீக்கி விடும்படி கேட்டிருக்கிறார்.
ஆனால் வளர்ந்ததும், அதன்மீது தனி கவனம் செலுத்த தொடங்கியதுடன், தலைமுடி தன்னில் ஒரு பகுதி என்ற உணர்வும் சாஹலுக்கு ஏற்பட்டது. சீக்கிய மதத்தினை சார்ந்த சாஹல், மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.
சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில், சாஹலின் நீண்ட தலைமுடியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.
இதுபற்றிய வீடியோ ஒன்றை கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சாஹல், தன்னுடைய தலைமுடி பராமரிப்பு பற்றி பேசியுள்ளார். தலைமுடியை அலசி, சுத்தம் செய்து, எப்படி தலைமுடியை வாருவது என்பது பற்றி சாஹலின் தாயார் உதவி செய்திருக்கிறார். அப்படி அவர் உதவவில்லை எனில், நாள் முழுவதும் அதற்காக செலவிட வேண்டி இருக்கும் என சாஹல் கூறுகிறார்.
அப்படி தலைமுடியை அலசாமல் அல்லது காய வைக்காமல் இருக்கும்போது, சீக்கிய முறையை பின்பற்றுபவர்களிடையே காணப்படுவது போன்று, அதனை உருண்டையாக சுற்றி வைத்து, டர்பன் அணிந்து கொள்கிறார். இந்த சாதனையை பற்றி மற்றவர்களிடம் கூறும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான் பொய் கூறுகிறேன் என நினைத்துவிட்டனர். அதன்பின்பு, அவர்களை நம்ப வைக்க சில சான்றுகள் தேவைப்பட்டன என அந்த வீடியோவில் கூறுகிறார். கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2024-ல் தன்னுடைய சாதனையும் ஒரு பகுதியாக இருப்பதற்காக சாஹல் அதிக மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
- பெரும்பாலும் பெண்கள் பலர் தலைமுடியை தானமாக வழங்க முன்வருகின்றனர்.
- சிறுவன் ஒருவர் தானமாக வழங்கியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
அவிநாசி :
புற்றுநோயாளிகளுக்கு பலர் தங்களது தலைமுடிகளை தானமாக வழங்கி வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் பலர் தலைமுடியை தானமாக வழங்க முன்வருகின்றனர். இந்தநிலையில் பெண்கள் மட்டும் தான் தானம் கொடுக்க முடியுமா?
நானும் கொடுப்பேன் என்று, அழகாக தலைமுடியை வளர்த்து, சிறுவன் ஒருவர் தானமாக வழங்கியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.அவிநாசி சேவூர் ரோடு, வ.உ.சி., காலனியை சேர்ந்தவர் வழக்கறிஞர் விஜய் ஆனந்த்.இவரது மனைவி சங்கீதா. இவர்கள் மகன் இறை எழில்பரிதி, நீளமாக தலைமுடியை வளர்த்து புற்றுநோயால்பாதித்தவர்களுக்கு, விக் தயாரிப்பதற்காக முடியை தானம் வழங்கியுள்ளார். முடிதானம் செய்த சிறுவனை அவிநாசி கிழக்கு ரோட்டரி நிர்வாகிகள் உட்பட பலர் பாராட்டினர்.