என் மலர்
நீங்கள் தேடியது "தீவிபத்து"
- தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
- யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தானே:
மும்பை அருகே உள்ள தானே மாவட்டத்தில் ஸ்ரீநகரில் வாக்லே எஸ்டேட் பகுதி அமைந்து உள்ளது. இங்குள்ள 5 மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்த சலவைக் கடையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதைதொடர்ந்து குடியிருப்பில் இருந்த சுமார் 250 பேரும் பாதுகாப்பாக கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் 1 மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.
பின்னர் வெளியேற்றப் பட்டவர்கள் தங்கள் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
- கொதிக்கலனில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- மற்ற தொழிலாளர்களின் விவரத்தை தெரிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், பென்னேபள்ளியில் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் உலை கொதிக்கலனில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் அப்பகுதியில் வேலை செய்து கொண்டுடிருந்த 7 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். தீ விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் போலீசார் தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு நாயுடு பேட்டை மற்றும் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து உள்ளூர் பொதுமக்கள் கூறுகையில்:-
தொழிற்சாலையில் இரவு பணியில் பீகாரை சேர்ந்த 50 தொழிலாளர்கள் வேலை செய்வது வழக்கம். ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் 7 பேர் மட்டும் காயம் அடைந்ததாக தெரிவிக்கின்றனர்.
இரவு பணியில் இருந்த மற்ற தொழிலாளர்களின் விவரத்தை நிர்வாகம் தெரிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறது. இதனால் மற்ற தொழிலாளர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை என்றனர். தீயில் தொழிலாளர்கள் சிக்கினார்களா? என ஆய்வு செய்தனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏசி எந்திரத்தில் இருந்து தீப்பொறி உருவாகி தீயானது மளமள வென்று பரவியது.
- ஷெட் முழுவதிலும் கரும்புகை ஏற்பட்டு வெளியேறியது.
மதுரை:
மதுரை மாநகர் புதூர் அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே புதூர் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மருத்துவமனை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தற்காலிகமாக பிளாஸ்ட் ஆப் பாரிஸ் மூலம் செட் அமைக்கப்பட்டு அதில் செவிலியர்கள் சிலர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை செவிலியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
முதலில் புகை வெளியேறிய நிலையில் அதன் மூலம் தீப்பொறி உருவாகி தீயானது மளமள வென்று அனைத்து அறைகளுக்கும் பரவத்தொடங்கியது.
இதனையடுத்து அங்கு தங்கியிருந்த ஐந்து செவிலியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். இதற்கி டையே தீ விபத்து ஏற்பட்ட மூன்றாவது மாடியில் இருந்து வானுயர எழுந்த புகையை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்கள் உடனடியாக கீழே இறங்கி வந்த செவிலியர்களை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். அப்போது ஒரு நர்சிங் மாணவி மயக்கம் அடைந்ததார். பின்னா் இயல்பு நிலைக்கு மாணவி திரும்பிய நிலையில் அருகில் உள்ள விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதற்கிடையே தீயானது வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் ஷெட் முழுவதிலும் கரும்புகை ஏற்பட்டு வெளியேறியது. தகவல் அறிந்த மதுரை தல்லாகுளம் தீய ணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைத்து, செவிலியர்கள் தங்கும் அறையில் உள்ள கண்ணாடி மற்றும் ஷெட் ஆகியவற்றை உடைத்து கரும்புகையை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் செவிலியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த அவர்களின் உடைமைகள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. தொடர்ந்து இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆக்சிஜன் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் புகையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மதுரை புதூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் தங்கி இருந்த செவிலியர்கள் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் இன்றி தப்பினர். தீ விபத்து தொடர்பாக புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- மில்லில் இருந்த எந்திரங்கள், பஞ்சு நூல்கள் சேதமடைந்தன.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தீத்தாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 50). இவருக்கு சொந்தமான நூல் மில் சேரன் நகர் பகுதியில் உள்ளது. இந்த மில் 2 ஷிப்டுகளாக இயங்கி வருகிறது. 60 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை மின்கசிவு காரணமாக திடீரென பில்டர் பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து வெள்ள கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் காங்கயத்தில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.
மேலும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் மில்லில் இருந்த எந்திரங்கள், பஞ்சு நூல்கள் சேதமடைந்தன. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
- பி-4 பயணிகள் பெட்டியின் அடியிலிருந்து திடீரென புகை வந்தது.
- பயணிகள் உயிர் பயத்தில் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், காச்சி குடாவில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது.
ரெயில் காட்வாலா, ராஜோலி ரெயில் நிலையங்களை கடந்து நேற்று இரவு கடவாலா ரெயில் நிலையத்திற்கு வந்தது நின்றது. பயணிகள் ரெயிலில் இருந்து ஏறி, இறங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது பி-4 பயணிகள் பெட்டியின் அடியிலிருந்து திடீரென புகை வந்தது. பின்னர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனைக் கண்ட பயணிகள் உயிர் பயத்தில் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் ரெயில் நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் ரெயில் பெட்டியை ஊழியர்கள் சரி செய்த பிறகு காலதாமதமாக ரெயில் மீண்டும் சென்னை எழும்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது.
- தீ விபத்து குறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக். தொழிலதிபரான இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு விற்பனைக்காக ஏராளமான புதிய ஸ்கூட்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் பழுதுநீக்கும் சர்வீஸ் நிலையமும் அமைந்துள்ளதால் அங்கு பலர் தங்களது வாகனங்களை விட்டு சென்றிருந்தனர்.
நேற்று இரவு வழக்கமான நேரத்தில் ஷோரூம் பூட்டப்பட்டது. பணியில் இருந்த ஊழியர்களும் புறப்பட்டு சென்றனர். நள்ளிரவில் அந்த ஷோரூமில் இருந்து அளவுக்கு அதிகமாக புகை வந்துள்ளது. அடுத்து ஒருசில நிமிடங்களில் அங்கு பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஷோரூம் உரிமையாளருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உடனடியாக வந்த கார்த்திக் ஷோரூம் அருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு தீ விபத்து ஏற்பட்டு வெப்பம் வெளியேறியது. இதையடுத்து அவர் விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 19 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், 9 சர்வீஸ் பணிக்காக வந்த ஸ்கூட்டர்கள் மற்றும் ஏராளமான கம்ப்யூட்டர்கள், பிரிண்டர் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அருகில் உள்ள பாண்டியன் என்பவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக் கடை உள்ளிட்ட ஒருசில கடைகளிலும் தீ பற்றியது. இதில் எலெக்ட்ரிக் கடையில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்து குறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- நேற்றைய தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
- உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நேற்றைய தினம் [டிசம்பர் 12] ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரித்துள்ளார்.
- 2 மினி பஸ்கள் மோதிய வேகத்தில் அந்த பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன.
- பஸ்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர்.
ஐவரி கோஸ்ட் நாட்டின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள ப்ரோகோவா என்ற கிராமத்தில் 2 மினி பஸ்கள் மோதி விபத்து ஏற்பட்டது. மோதிய வேகத்தில் அந்த பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதில் பஸ்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஐவரி கோஸ்ட்டில் பாழடைந்த சாலைகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சாலையில் சென்று கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டது.
- தனியார் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமானது.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு 36 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் லட்சுமிபுரத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணியளவில் திடீரென பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது.
சாலையில் சென்று கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்ட நிலையில், பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கி உயிர் தப்பினர்.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தனியார் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமானது.
இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
- மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனம் இதை நடத்தி வருகிறது
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கமாரியா பகுதியில் செயல்பட்டு வரும் ஆயுதத் தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த காலையில் தொழிற்சாலையின் எரிபொருள் நிரப்பும் பிரிவில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. எனவே தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சமபவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த ஆயுத தொழிற்சாலையானது மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- காயம் அடைந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து தகவல்களை அறிந்துகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.
வேகமாக மோதியதால் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்தன. பயணிகள் விரைவு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரெயில், தன்பந்த் விரைவு ரெயில் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.
விபத்து குறித்து தகவல்களை அறிந்து கொள்வதற்காக 044-25330952, 044-25330953, 044-24354995 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரெயில் விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் நாசர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மீட்பு பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார்.
- விபத்து குறித்து தகவல்களை அறிந்துகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரெயில்கள் நிறுத்தம்
திருவள்ளூர்:
மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.
வேகமாக மோதியதால் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்தன. பயணிகள் விரைவு ரெயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திகு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரெயில், தன்பந்த் விரைவு ரெயில் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், விபத்து குறித்து தகவல்களை அறிந்து கொள்வதற்கான உதவி எண்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
044-25330952, 044-25330953, 044-25354995 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.