என் மலர்
நீங்கள் தேடியது "பிராவோ"
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
- பிராவோ சிஎஸ்கே அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டவர்.
ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசகர் ஆகியோரை நியமித்து வருகிறது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டி, 91 டி20 போட்டிகளில் விளையாடி 5293 ரன்கள் எடுத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. இவர் 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகளில் விளையாடி வந்தார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 24-ந் தேதி நடைபெற்ற போட்டியின் போது பிராவோவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்த அவர் பாதியில் வெளியேறினார். அந்த போட்டியில் அவர் விளையாடி அணி தோல்வியடைந்தது. அதுதான் அவரது கடைசி போட்டி என ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து பிராவோ ஓய்வு பெறுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டி, 91 டி20 போட்டிகளில் விளையாடி 5293 ரன்கள் எடுத்துள்ளார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார். அப்போது ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பாராத வகையில் அரையிறுதி வரை முன்னேறியது. இதற்கு முக்கிய காரணமாக பிராவோ பார்க்கப்பட்டார்.
- ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பிராவோ உள்ளார்.
- டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது.
இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி வீரர்களான முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
எதிர்வரும் டி20 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் ஆலோசகராக டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில், பிராவோ விரைவில் அணியில் இணைவார் என்று தெரிகிறது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பிராவோ உள்ளார். மேலும் 2 முறை டி20 உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராவோ இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிராவோ ஐபிஎல் கிரிக்கெட்டில் 183 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- சாவ்லா 184 விக்கெட்டுகள் வீழ்த்தி பிராவோவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 169 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா ரிங்கு சிங்கை 9 ரன்னில் ஆவுட்டாக்கினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த பிராவோவை 3-வது இடத்திற்கு தள்ளி, 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பிராவோ 183 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பியூஷ் சாவ்லா ரிங்கு சிங்கை அவுட்டாக்கியதன் மூலம் 184 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
சாஹல் 200 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். புவனேஷ்வர் குமார் 178 விக்கெட்டுகள் வீழ்த்தி 4-வது இடத்தில் உள்ளார்.
- யார்க்கர் வீசாமல் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது.
- இதேபோன்ற திட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம்.
சென்னை:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் சந்தித்து புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி உள்ளூர் மைதானத்தில் இந்த சீசனில் ஆடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அதே ஆதிக்கத்தை தொடருமா? என்பதை பார்க்கலாம்.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாறுவதற்கு காரணம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாறுவதற்கு காரணம், யாக்கர் பந்துகளை தங்களால் வீச முடியாது என நினைத்து, தங்களை ஏமாற்றிக் கொள்வதால்தான். அதனால்தான் சிஎஸ்கேவில் பயிற்சி எடுக்கும்போது ஒவ்வொரு பவுலர்களையும் 12 - 14 யாக்கர் பந்துகளை வீசச் சொல்லுவேன்.
யார்க்கர் வீசாமல் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது. டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர்களான லசித் மலிங்கா, பும்ரா அல்லது பத்திரனா, நான் விளையாடியபோது நானே, இதேபோன்ற திட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம். முடிந்தவரை அதிக யார்க்கர்களை வீச முயற்சி செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
- ஷர்துல் தாக்கூர் 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசிய தேஷ்பாண்டே மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோரை பிராவோ கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
துஷார் தேஷ்பாண்டே நான்கு ஓவர்கள் வீசி வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதைப்போன்று ஷர்துல் தாக்கூர் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
குறிப்பாக 15-வது ஓவரை வீசிய சர்துல் தாக்கூர், இரண்டு ரன்களையும் 16-வது ஓவரை வீசிய தேஷ்பாண்டே மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதுதான் ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பிராவோ கூறியதாவது:-
துசார் தேஷ்பாண்டே, சர்துல் தாகூர் ஆகியோர் வளர்வதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்பா மகன்களை கட்டி அணைப்பதுபோல உங்களை கட்டி அணைத்தேன். உங்கள் தந்தையை பெருமைப்படுத்தி விட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
- டோனி மற்றும் பிராவோ தாண்டியா ஆட்டத்தை உற்சாகமாக ஆடியுள்ளனர்.
- டோனி மனைவி சாக்ஷி மற்றும் பிராவோவின் மனைவியும் தாண்டியா ஆட்டம் ஆடினார்கள்.
ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2-ம் தேதி பங்கேற்று வந்தார் கேப்டன் எம்எஸ் டோனி. சக வீரர்களுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்கு தயாராகுவதோடு, பயிற்சி முகாமிலேயே ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் திட்டங்களை ஆலோசிப்பார். அதேபோல் இளம் வீரர்களை புரிந்து கொள்ளும் காலமாக இந்த மாதம் அமையும்.
ஆனால் முதல்முறையாக சிஎஸ்கே பயிற்சி முகாமில் டோனி தாமதமாக பங்கேற்கிறார். இதற்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது தான் காரணமாக அமைந்துள்ளது. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் இருவருக்கும் ஜூலை 12-ல் திருமணம் நடக்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் டோனி மற்றும் பிராவோ தாண்டியா ஆட்டத்தை உற்சாகமாக ஆடியுள்ளனர். அவருக்கு அருகே மனைவி சாக்ஷி மற்றும் பிராவோவின் மனைவியும் தாண்டியா ஆட்டம் ஆடினார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சிஎஸ்கே குழுமத்துடன் இணைந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது.
- டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவும் இணைந்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்று மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கு உலக அளவில் கிடைத்த வரவேற்பின் காரணமாக தற்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நிர்வாகங்களும் அவர்களது நாட்டில் டி20 லீக் போட்டிகளை அறிமுகப்படுத்தி நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற இருக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 என்கிற லீக் போட்டிகளானது முதல் சீசனாக இந்தாண்டு நடைபெற இருக்கின்றன. இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கிறது.
அதில் சிஎஸ்கே குழுமத்துடன் இணைந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் நகரை தலைமையாக கொண்ட இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கே முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு சிஎஸ்கே அணியில் இருந்த உதவி பயிற்சி நிர்வாகிகள் அனைவரும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவும் இணைந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி பிசிசிஐ தொடர்புடைய அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வினை அறிவித்த ராயுடு தற்போது அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். அவருக்கு இந்த வாய்ப்பினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகமே வழங்கி உள்ளது. அதேபோன்று சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் பிராவோவும் இந்த தொடரில் ஒரு வீரராக விளையாடுகிறார்.
இப்படி அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த லீக் போட்டியில் விளையாடும் அந்த வாய்ப்பு குறித்து அம்பத்தி ராயுடுவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரானது ஜூலை 14-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ஏழு வீரர்களை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை அணிக்காக விளையாடி வரும் டேவான் கான்வே மற்றும் மிட்சல் சான்ட்னர் ஆகியோரும் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.
அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர்கள் டேவிட் மில்லர், ஜெரால்டு கோட்சே ஆகியோரும் தற்போது இடம் பிடித்துள்ளனர். அதனைத்தவிர்த்து மீதமுள்ள வீரர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த உள்ளூர் வீரர்களாக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டோனி 2024 ஐபிஎல்-லில் 100 சதவீதம் விளையாடுவார்.
- கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது டோனிக்கு தெரியும்.
சென்னை:
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் டோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அவரிடமே கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து டோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை. டோனி இந்த தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தாலும், சிலரோ அவர் அடுத்த சீசனும் விளையாடுவார் என்றும் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற பிளே ஆப் போட்டிக்கு பிறகு ஓய்வு முடிவு குறித்து டோனி கூறுகையில், மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன்.
விளையாடுகிறேனோ அல்லது வேறு ஏதாவது பொறுப்பில் இருப்பேனோ என்பது தெரியவில்லை. எப்படியானாலும், நான் எப்போதும் சிஎஸ்கே அணியின் அங்கமாகவே இருப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டோனி அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
டோனி 2024 ஐபிஎல்-லில் 100 சதவீதம் விளையாடுவார். குறிப்பாக இம்பேக்ட் பிளேயர் விதி அவரை நீண்ட நாட்களுக்கு விளையாட வைக்கும். ரகானேவும், சிவம் துபேவும் அணிக்கு வலிமை சேர்ப்பதால், டோனியிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது டோனிக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குவாலிபையர் 2-ல் குஜராத் அணியும் மும்பை அணியும் நாளை அகமதாபாத்தில் மோதவுள்ளது.
- சென்னை இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள நிலையில் மும்பை அணியும் இறுதிப் போட்டிக்கு வரவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் பிளே சுற்றில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் இடம் பெற்றது.
இந்நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை - குஜராத் அணிக்கு குவாலிபையர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி டோனியின் சிறப்பான கேப்டன்ஷிப்பால் 157 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனால் சென்னை அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று எலிமினேட்டர் சுற்றில் மும்பை - லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 182 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 101 ரன்னில் சுருண்டது.
இதன்மூலம் குவாலிபையர் 2-ல் குஜராத் அணியும் மும்பை அணியும் நாளை அகமதாபாத்தில் மோதவுள்ளது.
சென்னை இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள நிலையில் மும்பை அணியும் இறுதிப் போட்டிக்கு வரவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு மும்பை அணி வரக்கூடாது என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ சிரித்தபடி கூறியுள்ளார்.
இதனை கிரிக்கெட் ரசிகர்கள் பயந்துட்டியா குமாரு என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும் சென்னை அணி நான்கு முறையும் கைப்பற்றியுள்ளது.
- சாஹல் 4 விக்கெட்களை எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
- ஐதராபாத் தங்களுடைய 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியது.
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஐதராபாத் தங்களுடைய 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியது.
அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/2 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 35 (18) ஜோஸ் பட்லர் 95 (59) கேப்டன் சஞ்சு சாம்சன் 66* (38) என களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக பெரிய ரன்களை எடுத்தனர்.
அதை தொடர்ந்து ஐதராபாத் அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 4 விக்கெட்களை எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
4 விக்கெட்களை ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு அபாரமாக செயல்பட்ட சாஹல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர் என்ற பிராவோவின் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.
சொல்லப்போனால் அவரை விட மிகவும் குறைந்த போட்டிகளில் 183 விக்கெட்களை எடுத்து அதை சமன் செய்துள்ள சாஹல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் புதிய சாதனையும் படைத்துள்ளார்.
அந்தப் பட்டியல்:
1. சாஹல் : 183* (142 போட்டிகள்)
2. பிராவோ : 183 (161 போட்டிகள்)
3. பியூஸ் சாவ்லா : 174* (175 போட்டிகள்)
4. அமித் மிஸ்ரா : 172* (160 போட்டிகள்)
5. ரவிச்சந்திரன் அஸ்வின் : 171* (195 போட்டிகள்)
- சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
- அகமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகிறது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் அணி வீரர்களின் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியீட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் நம்ம ஊரு சென்னைக்கு விசில் போடுங்க பாடலுக்கு அணியின் கேப்டனான எம்எஸ் டோனி பந்து வீச்சு பயிற்சியாளரான பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.