என் மலர்
நீங்கள் தேடியது "மதுக்கடைகள்"
- தமிழ்நாட்டில் இப்போது 4 ஆயிரத்து 829 மதுக்கடைகள் உள்ளன.
- தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.
துணை முதலமைச்சர் நியமனம் மற்றும் அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழகத்தில் மதுக்கடை மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.
இது சம்பந்தமாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது 4 ஆயிரத்து 829 மதுக்கடைகள் உள்ளன. எப்.எல்.2, எப்.எல்.3 மதுக்கடைகள் 1,685 உள்ளது. மேலும் 400 மதுக்கடைகளுக்கு அனுமதி கேட்டு வந்த விண்ணப்பங்கள் அரசிடம் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உளுந்தூர்பேட்டையில் நடத்திய மதுஒழிப்பு மகளிர் மாநாட்டிலும் மதுக்கடைகளை மூடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மதுவை ஒழிக்க வேண்டும் என்று கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார்.
தமிழக அரசும் போதைப்பொருளுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகளுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருவதால் முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.
இது தவிர, அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மேலும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
- ஆந்திர மாநில புதிய மதுபான கொள்கை, அரியானா மாநிலத்தை பின்பற்றி தொடங்கப்பட்டுள்ளது.
- தனியார் மது விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி:
ஆந்திராவில் முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றதும் மதுபான கடைகள் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்தார். அதன்படி புதிய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 736 சில்லறை மது விற்பனை கடைகள் உருவாக்கப்படுகிறது. இந்த கடைகள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படுகிறது.
இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மதுபானக கொள்கை திட்டத்தின்படி அரசுக்கு ரூ.5500 கோடி வருவாய் ஈட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆந்திர மாநில புதிய மதுபான கொள்கை, அரியானா மாநிலத்தை பின்பற்றி தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ந்தேதி முதல் புதிய மதுபான கொள்கை கொண்டுவரப்படும். அதில் ரூ.99 மற்றும் அதற்கும் குறைவான மதுபானங்கள் அறிமுகம் செய்யப்படும் 1-ந்தேதி முதல் குறைந்த விலையில் தரமான மதுபானங்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த நிலையில் கடைகள் ஒதுக்குவது குறித்த நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறவில்லை. இதனால் வருகிற 12-ந்தேதி மதுபான கடைகள் தனியார் மயமாக்கப்பட்டு ரூ.99-க்கு கிக்கான மதுபாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏக்கத்துடன் காத்திருந்த மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இன்னும் 10 நாட்கள் குறைந்த விலை மதுவுக்கு காத்திருக்க வேண்டுமா? என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தனியார் மது விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அறநிலையத்துறை புனரமைப்பு செய்த கோவில்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
- நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 15 சதவீத வாக்குகளை இழந்துள்ளது.
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் மூட வேண்டுமே தவிர மத்திய அரசு மூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு. மக்களை ஏமாற்றும் மோசடி.
அறநிலையத்துறை புனரமைப்பு செய்த கோவில்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 15 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் அ.தி.மு.க. செல்கிறதா? என அக்கட்சி தொண்டர்கள் நினைத்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 39 டாஸ்மாக் கடைகளை ரெயில்வே பாதுகாப்பு படை அடையாளம் கண்டுள்ளது.
- குற்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை புறநகர் மின் சார ரெயில் மீது கல்வீச்சு, சிக்னல் சேதம், திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ரெயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களே இதற்கு முக்கிய காரணம் என்று ரெயில்வே பாதுகாப்பு படையின் ஆய்வில் தெரிய வந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெற்கு ரெயில்வே சார்பில் டாஸ்மாக் நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் இருந்து 10 முதல் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 39 டாஸ்மாக் கடைகளை ரெயில்வே பாதுகாப்பு படை அடையாளம் கண்டுள்ளது.
இந்த கடைகள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பார்களில் மது அருந்திவிட்டு ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடக்கின்றனர்.
பெரம்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, கிண்டி, தரமணி, பெருங்குடி, திருவள்ளூர், ஊரப்பாக்கம், பழவந்தாங்கல், குரோம்பேட்டை, அரக்கோணம், இந்து கல்லூரி, ஆவடி உள்ளிட்ட இடங்களில் ரெயில் நிலையங்களுக்கு அருகில் மதுக்கடைகள் அமைந்துள்ளன.
லெவல் கிராசிங் கேட்களுக்கு அருகில் செயல்படும் மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெற்கு ரெயில்வே வலியுறுத்தி உள்ளது.
தற்போது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் மதுக்கடைகள் செயல்பட தடை உள்ளது.
ஆனால் ரெயில் நிலையங்களுக்கு அருகில் மதுக்கடைகள், பார்கள் செயல்படுவதால் ரெயில்வே குற்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மதுக்கடைகளில் உள்ள ஊழியர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.
- டிஜிட்டல் நடைமுறையால், நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் நம்புகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் செய்யப்பட்ட மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு (2023-2024) ரூ.45 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.123 கோடியும், மாதத்துக்கு ரூ.3,698 கோடியும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
ஆனால், கொரோனா காலத்துக்கு பிறகு மது விற்பனை குறைந்து போனதுடன் டாஸ்மாக் நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கத் தொடங்கத் தொடங்கியது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் (மதுப் பிரியர்கள்) நன்மதிப்பை பெறும் வகையில், டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
அதாவது, மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதை தடுக்கவும், மது பாட்டில்கள் கொண்டுவரப்படும்போது போக்குவரத்தில் ஏற்படும் முறைகேட்டை தவிர்க்கவும், கடைகளில் இருப்பு நிலவரத்தை கண்காணிக்கவும் மது விற்பனையில் டிஜிட்டல் முறை கொண்டுவரப்பட இருக்கிறது.
இதன் மூலம், தொழிற்சாலைகளில் மது உற்பத்தியாகி, பாட்டில்களில் அடைக்கப்பட்டு வெளியேறி, குடோன்களின் தங்கி, பின்னர் கடைகளுக்கு வந்து விற்பனையாகி மதுப்பிரியர்களின் கைகளில் சேர்வது வரை, அதாவது உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து தரவுகளையும் கியூ-ஆர் கோடு மூலம் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 கடைகளிலும் இந்த டிஜிட்டல் வசதியை கொண்டுவருவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, பரிசார்த்த முறையில் கோவை வடக்கு, வடசென்னை ஆகிய இடங்களில் உள்ள 266 டாஸ்மாக் மதுக்கடைகளில் தீபாவளிக்கு பிறகு, வரும் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
அதாவது, கோவை வடக்கில் உள்ள 166 கடைகளிலும், வடசென்னையில் உள்ள 100 கடைகளிலும் இந்த டிஜிட்டல் நடைமுறை கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த கடைகளுக்கு இணையதள வசதி உள்ளிட்டவற்றை செய்துகொடுக்க மத்திய அரசின் ரெயில் டெல் நிறுவனம் ரூ.294 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது, கோவை வடக்கு, வடசென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இணையதளம் வசதி செய்து கொடுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இனி மது ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மது வகைகள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட உடன், அதில் கியூ ஆர் கோடு அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதில், பாட்டிலில் மது அடைக்கப்பட்ட நாள், நேரம் டிஜிட்டல் முறையில் ஏற்றப்படும். பிறகு அது சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டது, அரசு குடோனுக்கு வந்தது, அங்கிருந்து கடைகளுக்கு சென்றது, பிறகு விற்பனை செய்யப்பட்டது என அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும்.
மதுப்பிரியர்கள் இந்த மது பாட்டில்களை வாங்கும்போது அவர்களுக்கு ரசீது வழங்கப்படும். இதனால், அவர்கள் கூடுதல் பணம் கொடுக்க தேவையில்லை. பணத்தையும் ஜிபே மூலம் எளிதாக செலுத்தலாம். மது பாட்டில்களை வாங்கிய பிறகு, அதில் உள்ள கியூ-ஆர் கோடினை செல்போனில் ஸ்கேன் செய்து பார்த்தால் முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.
அதே நேரத்தில், மதுக்கடைகளில் உள்ள ஊழியர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.
இதுபோன்ற டிஜிட்டல் நடைமுறையால், நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் நம்புகிறது. அநேகமாக, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் மூலம் மது விற்பனை நடைபெறும் என தெரிகிறது.
- உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பீர் வகைகளை விரும்புகிறார்கள்.
- மதுக்கடைகளில் பீர் பாட்டில்களே அதிகம் விற்று தீர்கிறது.
சென்னை:
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பெரும்பாலானோர் உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள குளிர்ந்த பீர் வகைகளை விரும்புகிறார்கள். `பீர்' என்பது முன்பெல்லாம் பலரது வாழ்க்கையில் ஓய்வுடன் தொடர்புடையதாக இருந்து வந்தது.
ஓய்வில் இருப்பவர்கள் மனதை ரிலாக்சாக வைத்துக்கொள்ள `பீர்' பருகினார்கள். சமீப காலமாக `பீர்' மதுபானமாக மாறி விட்டது.
மேலும் அக்னி வெயில் நாள்தோறும் உச்சம் தொட்டு வரும் நிலையில் மதுக்கடைகளில் பீர் பாட்டில்களே அதிகம் விற்று தீர்கிறது.
இதனால் பீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கோடைகாலத்தில் பீர் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பீர் விற்பனை ரூ.38,360 கோடியை தொட்டது. வரும் 2028-ம் ஆண்டில் இந்தியாவில் பீர் விற்பனை ரூ.62,240 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப ஆண்டுக்கு ஆண்டு பீர் விற்பனையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோடை வெயில் அதிகரிக்கும் போது பீர்களின் தேவை அதிகரிப்பதால் மதுபான கடைகளும் அதற்கு ஏற்ப பீர் பாட்டில்களை தயாராக வைத்து விற்பனையை அதிகரித்து வருகின்றன.
பீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் பரவலாக பீர்களை கிடைக்க செய்யும் வகையில் பல நிறுவனங்களுடன் கூட்டாண்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பீர் விற்பனை 40 முதல் 45 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மதுக்கடைகளில் உள்ள மதுபானங்களில் பீர் வகைகளே அதிகம் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு கோடைகாலத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் பீர் விற்பனை சரிந்தது. ஆனால் இந்த ஆண்டு கோடை மழை பெய்யாத நிலையில் வெயிலும் உக்கிரம் காட்டுவதால் பீர் விற்பனை அதிகரித்து உள்ளது.
மேலும் இந்த கோடை வெயிலுக்காக பல நிறுவனங்கள் புதிய ரகங்களில் பீர் வகைகளை அறிமுகப்படுதி உள்ளன. மதுப்பிரியர்களின் ரசனைக்கு ஏற்ப இந்த பீர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
- தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மற்றும் முக்கிய நகரங்களில் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர்.
- தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
டாஸ்மாக் மதுக்கடைகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மதுபான ஆலைகளில் இருந்து பீர் வகைகள் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு பிரீமியம், லேகர் பீர், கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர், பிரீமியம் பீர், கிளாசிக் பீர், மேக்மை ஸ்ட்ராங் பீர், எஸ்.என்.ஜே. 10 ஆயிரம் டீலர்ஸ் சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு கெஸ்ட்ரா, ஸ்ட்ராங் பீர், ஹண்டர் வூட்பெக்கர், பவர் கூல் உள்பட 35 வகையான பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டிகளுக்கு மேல் பீர் விற்பனையாகிறது. கோடை காலம் வந்து விட்டதால் பீர் விற்பனை இன்னும் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் 65 லட்சம் பெட்டி அளவுக்கு பீர் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவும் கூலிங் பீர் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்குகிறார்கள். அதற்கேற்ப டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் தட்டுப்பாடின்றி வினியோகிக்கிறார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மற்றும் முக்கிய நகரங்களில் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர். இதனால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கிராம பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் பீர் முழுமையான அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுபோன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மது ஆலைகளில் இருந்து அதிகளவு பீர் கொள்முதல் செய்யப்பட்டு டாஸ்மாக் கடைகளுக்கு பீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஒரு வாரத்துக்கு தேவையான பீர் இருப்பு வைக்கப்பட்டு, தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகையில், இதற்கு முன்பு மது குடிப்பவர்கள் குறிப்பிட்ட ரக மதுபானங்களை வாங்கி குடிப்பது வழக்கம். மற்ற ரக பீர்களை குடித்தால் தலை வலிக்கும் என்று வாங்க மாட்டார்கள்.
ஆனால் இப்போது அப்படி அல்ல. எந்த ரகமாக இருந்தாலும் வாங்கி குடிக்கிறார்கள். அவர்களுக்கு போதை ஏற வேண்டும். அதுதான் நோக்கம். இதனால் ஒரு பிராண்ட் இல்லாவிட்டால் வேறொரு பிராண்டை வாங்கிச் சென்று குடிக்கிறார்கள். குடிகாரர்களின் மனநிலை மாறிவிட்டது. 5 வருடத்துக்கு முன்பு குடித்தவர்கள் மனநிலை வேறு விதமாக இருந்தது. இப்போது மனநிலை வேறு விதமாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் போதைக்கு அடிமையாகி கிடைத்த சரக்கை வாங்கி குடிக்கிறார்கள்.
இதனால் மது தட்டுப்பாடு என்ற நிலை வரவில்லை. டாஸ்மாக் நிர்வாகமும் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்து ஒரு வாரம் இருப்பு வைக்கும் அளவுக்கு சரக்கை அனுப்புகிறார்கள். இதனால் பீர் தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகிறது.
- கோடை காலங்களில் 65 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகும்.
சென்னை:
'டாஸ்மாக்' மதுக்கடைகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பீர் கம்பெனிகளில் தயாரிக்கப்படும் பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு பிரீமியம் லேகர் பீர், கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர், பிரீமியம் பீர், கிளாசிக் பீர், மேக்னம் ஸ்ட்ராங் பீர், எஸ்.என்.ஜே. 10 ஆயிரம் டீலக்ஸ் சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் பீர் உள்பட 35 வகையான பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகிறது. கோடை காலங்களில் 65 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகும். அதுவும் 'கூலிங் பீர்' வேண்டும் என்று கேட்டு வாங்குவது வாடிக்கையாளர்களின் வழக்கம்.
தமிழகத்தில் தயாரிக்கும் பீர் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் இப்போது வெளிமாநிலத்தில் தயாரிக்கப்படும் பீர் வகைககளை வாங்கவும் டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தை சார்ந்த எஸ்.ஓ.எம். குரூப் கம்பெனி கும்மிடிப்பூண்டியில் மது தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த கம்பெனியின் பீர் வகைகளை கொள்முதல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருகிற 10-ந்தேதிக்கு பிறகு ஹன்டர், உட்பெக்கர், பவர் கூல் உள்ளிட்ட புதிய ரக பீர்கள் விற்பனைக்கு வர உள்ளது.
இதே போல் பிற மாநிலங்களில் இருந்தும் விதவிதமான ரகங்களில் பீர் வகைகள் வாங்கி டிசம்பர் மாதத்தில் இருந்து விற்பனை செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் டாஸ்மாக் கடைகளில் எஸ்.என்.ஜே. குழுமத்தில் இருந்து 100 சதவீதம் பார்லி சார்ந்த பீரை அறிமுகப்படுத்தியது. இப்போது 4 சதவீதம் ஆல்கஹால் கொண்ட பீர் வகைகளை வாங்கி விற்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.
வெளிமாநில பீர் வகைகளை விற்பனை செய்ய ஏதுவாக அந்தந்த கம்பெனியினர் 'கூலிங் பிரிட்ஜ்' வழங்கவும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
- வருகிற 22-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளன.
- காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, புதுச்சேரியில் பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் வருகிற 22-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், செப்டம்பர் 22-ந்தேதி ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை நேரு வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட வழிகளில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது
- தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் அனைத்தும் சுதந்திர தினம் (நாளை) மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது.
தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுபானக்கடைகள், மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் மூடப்படும்.
- தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிககை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக்கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான க்கூடங்கள் ஆகியவை 15.8.2023 அன்று நாள் முழுவதும் மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென உத்தரவிடப் பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- தஞ்சை மாவட்டத்தில் 15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.
- நாகை மாவட்டத்தில் 7 மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
தஞ்சாவூர்:
தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கையின்போது 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 5,329 டாஸ்மாக் கடைகளில் 500 டாஸ்மாக் கடைகளை இன்று (வியாழக்கிழமை) முதல் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சை மாவட்டம்
தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 166 டாஸ்மாக் கடைகளில் 15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.
தஞ்சையில் சி.ஆர்.சி. டெப்போ எதிரே, தஞ்சை நாகை ரோடு, கீழவாசல், கீழஅலங்கம், மானோஜியப்பாவீதி, வடக்கு மெயின்ரோடு, கிழக்கு போலீஸ் நிலையம் ரோடு, கீழவாசல் அண்ணாசாலை, தெற்கு அலங்கம், சாந்தப்பிள்ளைகேட், பட்டுக்கோட்டையில் மார்க்கெட் ரோடு, மணிக்கூண்டு, முத்துப்பேட்டை ரோடு, உதயசூரியபுரம், அய்யம்பேட்டை குறிஞ்சிநகர் ஆகிய 15 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படுகின்றன.
திருவாரூர் -நாகை
இதே போல் திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 10 டாஸ்மாக் மது கடைகள் மூடப்படுகின்றன. நாகை மாவட்டத்தில் 7 மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 32 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், பல்வேறு கட்சியினர், பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.