என் மலர்tooltip icon

    உலகம்

    • அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது.
    • அமெரிக்க பொருட்கள் மீது சீனா 34 சதவீத வரி விதித்தது.

    நியூயார்க்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

    கடந்த 2-ம் தேதி இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது. அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளில் இருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் அரை கடத்திகள் அடிப்படையிலான மின்னணு கருவிகள், தரவுகள் சேமிப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

    • இதை வெறும் கண்களால் காண முடியும்.
    • வட அமெரிக்காவில் வசந்த காலத்தில் பூக்கும் காட்டுப்பூவான ஃப்ளோக்ஸ் சுபுலாட்டா பூ "மோஸ் பிங்க்" என்று அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் 'இளஞ்சிவப்பு நிலவு' (PINK MOON) தோன்றவுள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும்.

    இந்த ஆண்டின் மிகச்சிறிய முழு நிலவாக இது இருக்கும். ஏனெனில் சந்திரன் பூமியிலிருந்து அதன் மிகத் தொலைவான புள்ளியான அபோஜியில் இருக்கும். எனவே இதை MICRO MOON என்றும் அழைக்கின்றனர்.

    வசந்த காலத்தில் வரும் முதல் முழு நிலவு என்பதால் பிங்க் நிலா எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது.

    வட அமெரிக்காவில் வசந்த காலத்தில் பூக்கும் காட்டுப்பூவான ஃப்ளோக்ஸ் சுபுலாட்டா பூ "மோஸ் பிங்க்" என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பூக்கள் வசந்தத்தின் துவக்கத்தைக் குறிக்கின்றன. இதன் பின்னணியிலேயே PINK MOON என்று பெயர் வந்தது.  

    • பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது.
    • நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் தேசம் குறித்த தகவல் வௌியாகவில்லை.

    பாகிஸ்தானில் இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது.

    நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது ராவல்பிண்டி நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதாகவும் இந்த நிலநடுக்கத்தினால் பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக், சாக்வால் மற்றும் மியான்வாலி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெஷாவர், மர்தான், மொஹ்மாந்து மற்றும் ஷாப்கதார் ஆகிய நகரங்களில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் தேசம் குறித்த தகவல் வௌியாகவில்லை.

    • 23 லட்சம் மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
    • குழந்தைகள் பசியுடன் தூங்கப் போகிறார்கள். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் வெகுஜன பட்டினிக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது.

    இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் குறைந்தது 60,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல்நல சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்று காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஏனெனில் காசாவுக்குள் வரும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து முடக்கி வருகிறது.

    மார்ச் 2 முதல், எந்த மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் வாகனங்களும் காசாவிற்குள் நுழையவில்லை.  23 லட்சம் மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. 21 ஊட்டச்சத்து மையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையை சீர்குலைத்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

    உலக உணவுத் திட்ட அமைப்பு, மூன்று வாரங்களுக்கும் மேலாக காசாவிற்கு புதிய பொருட்களை கொண்டு வர முடியவில்லை என்று கூறியுள்ளது. காசாவில் தற்போதுள்ள இருப்புக்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே இருக்கும், இதனால் லட்சக்கணக்கானோர் கடுமையான பசியின் அபாயத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், காசாவின் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தடுப்பூசிகளும் மறுக்கப்படுகின்றன. இது சுகாதார நெருக்கடியை மோசமாக்குகிறது. UNRWA செய்தித் தொடர்பாளர் ஜூலியட் டூமா கூற்றுப்படி, "குழந்தைகள் பசியுடன் தூங்கப் போகிறார்கள். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் வெகுஜன பட்டினிக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது."

    மற்றொரு அடியாக, இஸ்ரேலின் மெகோரோட் நிறுவனம் காசாவின் 70% நீர் விநியோகத்தை துண்டித்தது. மீண்டும் நீர் வழங்கப்படாவிட்டால் ஒரு பேரழிவு தரும் நீர் நெருக்கடி ஏற்படும் என்று காசா அதிகாரிகள் கூறுகின்றனர்.

     இதற்கு மத்தியில் இஸ்ரேலின் கொடிய வான்வழித் தாக்குதல்களால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குழந்தைகள் மீது எதிர்மறையான அதீத அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. 

    • அதிபர் ஜோ பைடனால் தொடங்கப்பட்ட திட்டங்களின் கீழ் தற்காலிகமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள்.
    • அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான ஒன்பது இலக்க எண்களாகும்.

    சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வரும் சூழலில் உயிருள்ள 6000 பேரை இறந்தவர்களாக டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் அவர்களின் சமூக பாதுகாப்பு எண்கள் ரத்து செய்யப்பட்டது. எனவே அவர்கள் தாமாகவே அமெரிக்காவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை.

    தற்போது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட வெவ்வேறு நாட்டை சேர்ந்த 6,000 க்கும் மேற்பட்ட உயிருள்ள குடியேறிகள், முன்னாள் அதிபர் ஜோ பைடனால் தொடங்கப்பட்ட திட்டங்களின் கீழ் தற்காலிகமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள். தற்போது அவர்கள் அனைவரும் குறிவைக்கப்படுகிறார்கள்.

    இறந்தவர்களாக கருதப்பட்டு அவர்களின் சமூகப் பாதுகாப்பு எண்களை ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் அமெரிக்காவில் வேலை செய்யவோ அல்லது சலுகைகளைப் பெறவோ முடியாது.

    சமூக பாதுகாப்பு எண் என்றால் என்ன?

    இவை அமெரிக்க குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிக வேலை செய்யும் குடியிருப்பாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான ஒன்பது இலக்க எண்களாகும்.

    இந்த எண்கள் வருமானம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உட்பட பல அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

    குடியேறிகளுக்கு பைடன் நிர்வாகத்தால் இந்த சட்டப்பூர்வமாக சமூக பாதுகாப்பு எண்கள் வழங்கப்பட்டன. ஆனால் இப்போது டிரம்ப் நிர்வாகம் இந்த குடியேறிகளின் சமூகப் பாதுகாப்பு எண்களை பறிப்பதன் மூலமும், வங்கிகள் அல்லது பிற அடிப்படை சேவைகளைப் பயன்படுத்துவதை கடினமாக்குவதன் மூலமும் அவர்கள் தாமாக நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் ஏற்பட்டுள்ளது . 

    • செடிலோவும் அவரது கணவர் சாண்டியாகோவும் அமெரிக்காவில் தங்கள் புரூக்ளின் வாழ்க்கையை விட்டுவிட்டு வெளியேறினர்.
    • செடிலோ போன்றோரின் நெடும்பயணங்கள் நவீன இது சூப்பர்-கம்யூ என்று குறிப்பிடப்படுகிறது.

    பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது ஔவை மொழி. நவீன காலத்தில் அது வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. அந்த வகையில் 30 வயதான நாட் செடிலோ என்ற சட்டக்கல்லூரி மாணவி படிப்புக்காக வாரம் 3,380 கிமீ விமானத்தில் பயணித்து படித்து வருகிறார்.

    மெக்சிகோ நாட்டில் வசிக்கும் அவர் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு வாரமும் மான்ஹாட்டனுக்கு விமானத்தில் செல்கிறார்.

    தி நியூயார்க் போஸ்ட் செய்தியின்படி, செடிலோ திங்கள்கிழமை அதிகாலை மெக்சிகோவிலிருந்து விமானத்தில் ஏறி அமெரிக்காவில் வகுப்புகளை முடித்து செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்புகிறார். நியூயார்க்கின் ஒரு பிரபல சட்டக் கல்லூரியில் தனது இறுதி செமஸ்டரை முடிக்க அவரின் இந்த பயணம் அவசியமாகிறது.

    கடந்த ஆண்டு, செடிலோவும் அவரது கணவர் சாண்டியாகோவும் அமெரிக்காவில் தங்கள் புரூக்ளின் வாழ்க்கையை விட்டுவிட்டு மெக்சிகோவில் சிறந்தவ வானிலை மற்றும் மலிவு வாழ்க்கைச் செலவு காரணமாக ஈர்க்கப்பட்டு அங்கு சென்றனர். ஆனால் அவர் தனது சட்டக் கல்வியை விட்டுவிட விரும்பாமல் ஒவ்வொரு வாரமும் நெடும்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    ஜனவரி முதல், செடிலோ 13 வாரங்களில் விமானங்கள், உணவு மற்றும் குறுகிய கால தங்கத்திற்காக 2,000 டாலர் (₹1.7 லட்சம்) செலவிட்டுள்ளார். ஒவ்வொரு  முறையும் 3,380 கிமீ பயணித்து படித்துவிட்டு  அவர் வீடுதிரும்புகிறார். சோர்வு இருந்தபோதிலும், அந்த அனுபவத்தை அவர் மதிப்புக்குரியது என்று அவர் குறிப்பிடுகிறார். செடிலோ போன்றோரின் நெடும்பயணங்கள் நவீன இது சூப்பர்-கம்யூட்டிங் என்று குறிப்பிடப்படுகிறது. 

    • பெரிய பள்ளத்தாக்கின் குறுக்கே இரண்டு மைல்கள் நீளமுள்ள கட்டமைப்பு.
    • 216 மில்லியன் பவுண்டுகள் (அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2200 கோடி) செலவில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

    சீனாவில் ஹியாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம் வருகிற ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. இது ஒரு பெரிய பள்ளத்தாக்கின் குறுக்கே இரண்டு மைல்கள் நீளமுள்ள கட்டமைப்பு. 216 மில்லியன் பவுண்டுகள் (அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2200 கோடி) செலவில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தால் பெரிய பள்ளத்தாக்கை கடக்கும் பயண நேரம் ஒரு மணி நேரத்திலிருந்து ஒரு நிமிடமாகக் குறையும். ஈபிள் கோபுரத்தை விட 200 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட இந்தப் பாலம் ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடகலை சாதனையாகும்.

    பாலத்தின் எஃகு டிரஸ்கள் சுமார் 22,000 மெட்ரிக் டன் எடை கொண்டவை. மூன்று ஈபிள் கோபுரங்களுக்குச் சமமான எடை கொண்ட இந்த எஃகு டிரஸ்கள் இரண்டே மாதங்களில் நிறுவப்பட்டன.

    சீனாவின் கிராமப்புறப் பகுதியில் முக்கியமான போக்குவரத்து இணைப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தப் புதிய பாலம் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகவும் இருக்கும்.

    2016 ஆம் ஆண்டில், சீனாவின் மிக உயரமான பாலம் பெய்பன்ஜியாங்கில் கட்டப்பட்டது, இது வியக்கத்தக்க வகையில் 1,854 அடி உயரத்தில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    • ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வருகிறார்.
    • உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் வருகிற 21ம் தேதி இந்தியா வருகிறார்கள். அவர்கள் 24ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

    ஜே.டி.வான்ஸ் தனது மனைவியும் அமெரிக்கா வின் 2-வது பெண்மணியுமான உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வருகிறார். உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

    ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் சிம்லா, ஐதராபாத், ஜெய்ப்பூர், டெல்லிக்கு சுற்றுலா செல்ல உள்ளார். அவர் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜே.டி.வான்ஸ்க்கு பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். அதன்பின் வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.

    வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு அடுத்தபடியாக மிகவும் சக்தி வாய்ந்த நபராக உள்ள ஜே.டி.வான்சின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    ஜே.டி.வான்ஸ் தனிப்பட்ட பயணமாக இந்தியா வந்தாலும் வரி விதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் உயா் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில், இந்தியா-அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வரவுள்ளாா்.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வருகிற 22ம் தேதி சவூதி அரேபியா செல்லும் முன், அவரை வான்ஸ் மற்றும் வால்ட்ஸ் சந்திப்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    • குண்டுவெடிப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிரீஸ் தலைநகர் ஏதென்சில் அந்நாட்டின் முக்கிய ரெயில்வே நிறுவனமான ஹெலெனிக் டிரெயின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகே திடீரென்று குண்டுவெடித்தது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். பரபரப்பான அப்பகுதியில் குண்டுவெடித்ததால் பீதி நிலவியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு வேறு குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்தப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, சின்க்ரூ அவென்யூவில் உள்ள ஹெலெனிக் டிரெயின் நிறுவனத்தின் கட்டிடத்திற்கு அருகில் வெடிக்கும் சாதனம் கொண்ட ஒரு பை வைக்கப்பட்டிருந்தது என்றனர்.

    இதற்கிடையே குண்டுவெடிப்புக்கு சற்று நேரத்திற்கு முன்பு ஒரு செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியில் பேசிய நபர், ரெயில்வே நிறுவன அலுவலகங்களுக்கு வெளியே குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 40 நிமிடங்களுக்குள் வெடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த குண்டுவெடிப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரு சிறிய விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு சிறிய விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விமான விபத்தால் நெடுஞ்சாலையில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்தார்.

    • நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
    • ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    மாட்ரிட்:

    பிரிட்டனில் செயல்பட்டு வருவது ஸ்கைட்ரேக்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் ஆகஸ்ட் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை ஆய்வு ஒன்றை நடத்தியது. நூற்றுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த விமான நிலைய வாடிக்கையாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

    உலகெங்கிலும் உள்ள 565 விமான நிலையங்களில் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் பயணிகளிடம் சேவை குறித்து ஆய்வு நடத்தி உள்ளது.

    அதன்படி, உலகின் தலைசிறந்த விமான நிலைய உணவு, உலகின் தலைசிறந்த விமான நிலைய கழிவறை, ஆசியாவின் தலைசிறந்த விமான நிலையம் என பல்வேறு விருதுகளை சாங்கி விமான நிலையம் குவித்துள்ளது. இரண்டாவது இடத்தில் டோஹா விமான நிலையமும், ஜப்பானின் டோக்கியோ விமான நிலையம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இந்நிலையில், இந்தியாவின் 4 விமான நிலையங்கள் முதல் நூறு இடங்களில் இடம் பிடித்துள்ளன. டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் 32வது இடத்திலும், பெங்களூரு விமான நிலையம் 48வது இடத்திலும், ஐதராபாத் 56வது இடத்திலும், மும்பை விமான நிலையம் 76வது இடத்திலும் நீடிக்கின்றன.

    • சீனா 84 சதவீதம் வரி விதித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்திருந்தது.
    • அதற்கு அமெரிக்கா 145 சதவீதம் வரியை உயர்த்தியது. இதற்கும் சீனா பதிலடி கொடுத்துள்ளது.

    அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்கா இறக்குமதி செய்யும் மற்ற நாடுகளின் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    ஏப்ரல் தொடக்கத்தில் அதை நடைமுறைப்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதித்தார். அதேபோல் சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கும் வரி விதித்தார்.

    இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த வரி விதிப்புக்கு எதிர்வினையாற்றவில்லை. ஆனால், சீனா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்து வருகிறது.

    இதனால் கோபம் அடைந்த டொனால்டு டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதித்தார். இதற்கும் சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 125 சதவீதம் வரி விதித்துள்ளது.

    முன்னதாக 84 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 125 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடமும் சீனா முறையிட்டுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு தடைவிதித்துள்ளது. இந்த விசயம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

    ×