என் மலர்
- விபத்தில் சிக்கி காயமடைந்த 20 பேரில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
- விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை நுவரெலியா என்ற பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இலங்கையின் கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது, மலைப் பகுதியான நுவரெலியா-கம்பளை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென மலையிலிருந்து 100 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விழுந்தது.
இதில் பயணிகள் பலர் சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்த 20 பேரில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
- வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே 89 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தீ விபத்தில் தம்பதி நடராஜன்- தங்கம் மற்றும் அவர்களது மகன் ஸ்ரீராம் ஆகியோர் சிக்கினர்.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கத்தில் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணவன்- மனைவி உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் தம்பதி நடராஜன்- தங்கம் மற்றும் அவர்களது மகன் ஸ்ரீராம் ஆகியோர் சிக்கினர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீ்ட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில், தம்பதி நடராஜன்- தங்கம் ஆகியோர் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. மேலும், பலத்த காயங்களுடன் ஸ்ரீராம் மீட்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது
- அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக டிரம்ப் சிலை வைத்துள்ளார்
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப், அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக சிலை வைத்துள்ளார்
இந்த புகைப்படத்தை வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
- கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்.
- இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிக்கிறார்.
லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். டிராகன் திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு நேற்று வெளியிட்டது. படத்தின் இரண்டாம் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பிரதீப் உடம்பில் சட்டை இல்லாமல் நிற்கிறார். பக்கத்தில் மமிதா பைஜு கண்ணாடி அணிந்து கொண்டு நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது.
இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
- இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழகம், புதுவையில் மிதமான மழையுடன் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு இருந்தது.
காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இந்த திடீர் மழை வெப்பத்தை தணித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவையில் மிதமான மழையுடன் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூரில் 13ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வரும் 14, 15ம் தேதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு உலோக மெஷ் மூலம் பாதுகாக்கப்பட்ட வட்ட வடிவ ஹெட்லேம்ப் கொண்டுள்ளது.
- 398 சிசி ஒற்றை-சிலிண்டர் எஞ்சினைக் கொண்டு இருக்கும்.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது மலிவு விலை 400 சிசி பைக்குகளின் வேறுபாட்டை விரிவுபடுத்தி வருகிறது. இந்த வரிசையில் ஸ்க்ராம்ப்ளர் 400 X இன் ஆஃப்-ரோடு வகையும் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஸ்க்ராம்ப்ளர் 400 XC என்று அழைக்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்த பைக் பல்வேறு கட்டங்களில் சோதனைக்குட்பட்டது. வடிவமைப்பிலிருந்து தொடங்கி, டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 XC ஆஃப்-ரோடிங்கிற்காக அர்ப்பணிக்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.
ஒரு உலோக மெஷ் மூலம் பாதுகாக்கப்பட்ட வட்ட வடிவ ஹெட்லேம்ப் கொண்டுள்ளது. கூடுதலாக, பைக்கில் மஞ்சள் நிறத்தில் வரையப்பட்ட ஒரு பீக் உள்ளது. இது புதிய பெயிண்ட் ஸ்கீம் விருப்பங்களை அறிமுகப்படுத்துகிறது. அதைத் தவிர, பைக் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், கிராஸ்-ஸ்போக் டியூப்லெஸ் வீல்கள், ஹெட்லேம்ப்-இன் மேல் வைக்கப்பட்டுள்ள வைசர் மற்றும் எஞ்சினுக்கு சிறந்த சம்ப் கார்டு ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 XC-யின் வன்பொருள் பெரும்பாலும் அதன் முந்தைய மாடல்களை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சிறந்த ஆஃப்-ரோடு செயல்திறனுக்காக சஸ்பென்ஷன் அமைப்புக்கு இது வேறுபட்ட டியூனிங்கைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கிடையில், 398 சிசி ஒற்றை-சிலிண்டர் எஞ்சினைக் கொண்டு இருக்கும்.
இந்த யூனிட் 39 ஹெச்பி பவரையும் 37 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புதிய டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 XC ரூ.2.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இது ஸ்க்ராம்ப்ளர் 400 X உடன் ஒப்பிடும்போது ரூ.27,000 அதிகம்.
- அண்ணாமலை பேச்சு கற்பனை வாதம்.
- அமைதி தேவை என்பது தான் பொதுமக்களின் விருப்பம்.
கே.கே. நகர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்ப் செய்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் அரசு இந்த அறிவிப்பை செய்திருக்க வேண்டும். போர் நிறுத்தத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
ஆனால் நிரந்தர தீர்வு தேவை. சுமூகமான பேச்சுவார்த்தை தேவை. ஒட்டுமொத்தமாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதம் தலை தூக்கினால் இந்தியர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பெரும் தீங்கு விளைவிக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான ஜனநாயக கட்சிகள் அனைவரும் ஆதரிக்கிறோம். இந்தியா-பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். 2 நாடுகளுக்கு இடையே சுமூகமான உறவை பேண வேண்டும்.
போர் வேண்டும் என்று விரும்புகிற சக்திகள், ஜனநாயகத்தின் அடிப்படையில் போர் வேண்டாம் என்கிற சொல்லி வருபவர்கள் மீது அவதூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
அண்ணாமலை பேச்சு கற்பனை வாதம். அப்படியெல்லாம் ஒரு நாட்டை எளிதாக அழித்து ஒழித்து விட முடியாது. நாடு இல்லாமலேயே பயங்கரவாதம் என்பது இருக்கிறது. அகண்ட பாரதம் என்கிற செயல்திட்ட முறையில் பா.ஜ.க. செயல்படுகிறது.
பாகிஸ்தானை, இந்தியாவோடு சேர்ப்பது, ஆப்கானிஸ்தான் வரை இந்தியாவில் சேர்ப்பது என்ற இந்த அஜெண்டாவில் வைத்துள்ளனர். அமைதி தேவை என்பது தான் பொதுமக்களின் விருப்பம். காஷ்மீரில் வாழ்கின்ற எல்லா மக்கள் கூட அமைதியை விரும்புகின்றனர்.
எப்போதும் பா.ம.க.வுடன் கூட்டணி இல்லை என்ற உச்ச நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கேரளாவிற்கு ஷூட்டிங் செல்வதற்காக சென்னை வி்மான நிலையத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார்.
- போரை வலிமையாக, திறமையாக கையாண்ட பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்.
பாகிஸ்தானிற்குள் சென்று தாக்குதல் நடத்தியஇந்திய ராணுவத்திற்கு வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கேரளாவிற்கு ஷூட்டிங் செல்வதற்காக சென்னை வி்மான நிலையத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்," பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள்.
போரை வலிமையாக, திறமையாக கையாண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருக்கும் எனது வாழ்த்துகள்" என்றார்.
- தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14 மற்றும் 15-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16 மற்றும் 17-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை முதல் 15-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.