என் மலர்
- ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது.
- 3 ஆண்டுக்கு மேலாக சண்டை நடந்துவரும் நிலையில் தற்போது நேரடி பேச்சுவார்த்தை நடக்கிறது.
டிரானா:
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் சம்மதம் தெரிவித்தார்.
இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர். பாதுகாப்பு மந்திரி ருஸ்டெம் உமரோவ் தலைமையிலான உக்ரைன் தூதுக்குழு, அதிபரின் உதவியாளர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷிய குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார். ஐரோப்பிய கவுன்சில் தலைவர், ஐரோப்பிய ஆணைய தலைவர் மற்றும் நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் பிரதமர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், அமைதியை அடைவதற்கான முதல் படி போர் நிறுத்தம் என்றார். ரஷியா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜெலன்ஸ்கி, ராணுவ ஆதரவை வலுப்படுத்துதல், உக்ரைனின் வான் பாதுகாப்பு, பாதுகாப்பு உற்பத்தி திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
- வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரிவிதிக்க வகைசெய்யும் மசோதா வரையறுக்கப்பட்டது.
- இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 'தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்' என்ற புதிய மசோதாவை அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வரையறுத்துள்ளது. இதில் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என புதிய மசோதாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிரீன் கார்டு மற்றும் எச்1பி, எச்2ஏ, எச்2பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பால் அங்கு வசித்து வரும் 45 லட்சம் இந்தியர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
--------------
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- அரையிறுதி சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டாமி பால் முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சின்னர் 6-0 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சின்னர் 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோத உள்ளார்.
3 மாத தடைக்குப் பிறகு களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஜானிக் சின்னர் இறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டயமண்ட் லீக் தடகளப் போட்டி கத்தாரின் தோஹாவில் நடக்கிறது.
- பாருல் சவுத்ரி 3000 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையை முறியடித்தார்.
தோஹா:
டயமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடந்து வருகிறது. இதன் 3-வது சுற்று கத்தாரின் தோஹாவில் நடக்கிறது.
இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) என 4 பேர் களமிறங்கினர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் பாருல் சவுத்ரி பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் 9:13:39 நிமிடத்தில் தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் பாருல் சவுத்ரி தேசிய சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல், ஆறாவது இடத்தையும் பிடித்தார்.
நடப்பு ஆண்டின் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (3000 மீட்டர்) பாருல் சவுத்ரி போட்டியிடுவார்.
- தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
- நவம்பர் 11 முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
புதுடெல்லி:
தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. என சில கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளன. மதிமுக, பாமக கட்சிகள் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளன.
தமிழகம் மட்டுமின்றி பீகார், மேற்கு வங்காளம், அசாம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்க வேண்டிய தேதிகளை அறிவித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அவர்களது கட்சி சின்னங்களில் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கும். 234 தொகுதிகளில் 5 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்களில் போட்டியிடும் கட்சிகளுக்கு பொதுச்சின்னம் வழங்கப்படும். இதற்காக தேர்தல் நடக்கும் காலகட்டத்தில் இருந்து 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் பொதுச்சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2026 மே 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
- டயமண்ட் லீக் தடகள போட்டி தோஹாவில் நடந்து வருகிறது.
- நீரஜ் சோப்ரா 90 மீட்டருக்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்தார்.
தோஹா:
டயமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடந்து வருகிறது. இதன் 3-வது சுற்று கத்தாரின் தோஹாவில் நடக்கிறது.
இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) என 4 பேர் களமிறங்குகின்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். போட்டியின் முடிவில் அவர் 2வது இடம் பிடித்தார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடம் பிடித்தார்.
நீரஜ் சோப்ரா இதற்கு முன் 2022 ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் போட்டியில் 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்தது. 90 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ரா 3வது ஆசியவீரர் என்ற பெருமை பெற்றார்.
புதிய சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
- வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.
- தி சாத்தானிக் வெர்சஸ் நாவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நியூயார்க்:
இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கடந்த 2022, ஆகஸ்ட் 12-ம் தேதி நியூயார்க்கில் உள்ள சௌடவுகுவா கல்வி நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது மேடையில் ஏறிய ஹாடி மாத்தர் சல்மான் ருஷ்டியை 12 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 6 வார சிகிச்சைக்கு பின் படிப்படியாக குணமானார்.
இந்தத் தாக்குதலில் ருஷ்டியின் தலை, கழுத்து, இடது உள்ளங்கை, கல்லீரல், குடல் உள்பட உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது. ஹாடி மாதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1988-ம் ஆண்டு சல்மான் ருஷ்டி வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு இஸ்லாமிய மதவாதிகளிடையே கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. அவர் பல கொலை மிரட்டல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் அரங்கேறியது என கூறப்படுகிறது.
இந்நிலையில், குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதுகிறார்.
- பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்திவிட்டோம்.
- எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது.
திருப்பூரில் பா.ஜ.க. சார்பில் ஆபரேசன் சிந்தூர் வெற்றிப் பேரணி நடைபெற்றது. பேரணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, " பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்திவிட்டோம். எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது.
நாம் போரை விரும்பவில்லை என்றாலும் போருக்கு தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானை அந்த நாட்டு மக்களுக்காக பிரதமர் இந்த முறை மன்னித்திருக்கிறார். அமைதியா? போரா? எதை விரும்புகிறது என்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது."
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், பேரணி குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
இன்றைய மாலை திருப்பூரில், பெகல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக, நமது ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் பெருவெற்றி பெற்றதைப் பாராட்டும் விதமாகவும், நாட்டைக் காக்கும் பணியில், தங்கள் உயிரைத் தியாகம் செய்த நமது ஐந்து ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்,
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில், திருப்பூர் குமரன் சிலை முதல் மகாத்மா காந்தி சிலை வரை, தேசியக் கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நமது மக்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எங்கிருந்தாலும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.
அதன்படியே, நமது வீரம் மிகுந்த ராணுவம், விமானப்படை மூலம், பாகிஸ்தான் நாட்டிற்குள்ளே இருந்த தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களை எல்லாம் தாக்கி அழித்திருக்கிறது.
இந்த ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாட, கட்சி வேறுபாடின்றி, பெருமளவில் பொதுமக்கள் கூடி, நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
- இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி காந்த் கேரளாவுக்கு சென்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது.
ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி காந்த் கேரளாவுக்கு சென்றுள்ளார். அங்கு வந்த ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.