கும்பம் - வார பலன்கள்

வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை

Published On 2025-01-06 08:02 IST   |   Update On 2025-01-06 08:03:00 IST

5.1.2025 முதல் 11.1.2025 வரை

அனுபவித்த எண்ணிலடங்கா துயரம் தீரும் வாரம். ராசியில் சனி, சுக்ரன் சேர்க்கை செவ்வாய் பார்வையில் ஏற்பட்டுள்ளது. லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சேர்க்கை என கிரக சஞ்சாரம் கும்பத்திற்கு சாதகமாக உள்ளது. இதுவரை ஜென்ம ராசியில் நின்ற ராசி அதிபதி சனி பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை நோக்கி நகர்கிறார். முயற்சிகளுக்கும், திட்டமிடுதலுக்கும் குடும்ப உறவுகள் உதவியாக, ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார்கள். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமண வாய்ப்புகள் தேடி வரும்.

சொந்த இன, உறவுகளில் வரன் அமையும்.சொத்து வாங்கும் முயற்சிகள் சித்திக்கும். கடன் தொல்லை குறையும். வர வேண்டிய பணம் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடனை செலுத்த முடியும். வாழ்க்கையில் பிடிப்பு, தைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். பெண்கள் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆக மொத்தத்தில் இந்த வாரம் திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும்.கோ பூஜை செய்ய நன்மைகள் கூடும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News