மேஷம் - வார பலன்கள்

வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை

Published On 2024-12-23 02:08 GMT   |   Update On 2024-12-23 02:15 GMT

22.12.2024 முதல் 28.12.2024 வரை

தெய்வ அனுகூலமும், அதிர்ஷ்டமும் வழி நடத்தும் வாரம்.பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானம் செல்கிறார். சுறுசுறுப்பும் செயல்திறனும் கூடும். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் விலகும். கடந்தகால உழைப்பிற்கான பலன் இப்பொழுது கை கொடுக்கும். முன்னோர்களின் நல் ஆசியும் குலதெய்வ கடாட்சமும் உண்டாகும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த தீராத சிக்கல்கள் தீரும். உடல் ஆரோக்கியம் சீராகும். தடைபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு இப்பொழுது கிடைக்கும். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம்.

வேலைப்பளு கூடும். திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தடையை ஏற்படுத்திய அனைத்து விதமான தோஷங்களும் விலகி திருமணத்திற்கு வரன் வரும். 27.12.2024 அன்று பகல் 1.56 மணி முதல் 29.12.2024 அன்று இரவு 11.22 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நம்பியவர்கள் தக்க சமயத்தில் கை கொடுக்க மாட்டார்கள். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.விதி எந்த ரூபத்தில் வந்தாலும் மாற்றும் வல்லமை இறைபக்திக்கு உண்டு.குல தெய்வ வழிபாடு செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News