வேகமாக வந்து 25 அடி ஆழத்தில் விழுந்த கார் - பயணிகளுக்கு என்ன ஆச்சு தெரியுமா?
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஹேச்பேக் மாடல் டியாகோ அதன் பாதுகாப்பு திறனுக்கு பெயர் பெற்ற மாடல் ஆகும்.
- டாடா நிறுவனத்தின் பெரும்பாலான கார் மாடல்களும் பாதுகாப்பு சோதனையில் தொடர்ந்து அசத்தி வருகின்றன.
டாடா டியாகோ கார் பயன்படுத்தும் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர், குடும்பத்துடன் அதில் பயணம் செய்து கொண்டு இருந்தார். சம்பவத்தன்று டியாகோ காரில் மொத்தம் மூன்று பேர் பயணம் செய்துள்ளனர். கார் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டு இருந்த போது, நிலை தடுமாறியதை அடுத்து கார், 25 அடி ஆழத்தில் விழுந்தது.
கோர விபத்தை அடுத்து காரில் பயணித்தவர்கள் அதில் இருந்து வெளியேறி உள்ளனர். 25 அடி ஆழத்தில் கார் விழுந்த நிலையிலும், அதில் பயணம் செய்தவர்களுக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. விபத்தில் சிக்கிய கார் ஓனர், அதில் பயணம் செய்தவர்களுக்கு பேட்-ஏய்ட் போடும் அளவுக்கு கூட காயம் ஏற்படவில்லை என தெரிவித்து இருக்கிறார்.
காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது சாலையில் ஏதோ வருவதை பார்த்து, ஸ்டீரிங்கை திருப்பியதில் கார் நிலை தடுமாறி கீழே விழுந்து வீடு மற்றும் கான்க்ரீட் தரையில் வேகமாக மோதி இருக்கிறது. விபத்தில் சிக்கிய டியாகோ கார் மிக மோசமாக சேதமடைந்து இருக்கிறது.
கார் விபத்தில் சிக்கியதை அடுத்து அதில் இருந்தவர்கள், தாங்களாகவே வெளியேறி விட்டனர். அனைவரும் டாடா கார் வாங்க அறிவுறுத்தியதால், இந்த காரை வாங்கியதாக காரின் ஓனர் தெரிவித்து இருக்கிறார். டாடா கார்கள் இவ்வளவு தரமாக உருவாக்கப்படுவதற்கு காரின் ஓனர் தனது சமூக வலைதள பதிவில் நன்றியை தெரிவித்துள்ளார். இதோடு பாதுகாப்பை கருத்தில் கொள்பவர்கள் நிச்சயம் டாடா டியாகோ வாங்கலாம் என தெரிவித்து இருக்கிறார்.