ஆட்டோ டிப்ஸ்

இந்த கார்களை புதிதாக வாங்கவே முடியாது!

Published On 2022-07-12 12:58 IST   |   Update On 2022-07-12 12:58:00 IST
  • இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிதாக வாங்க முடியாத கார் மாடல்கள் பட்டியலை பார்ப்போம்.
  • இவற்றை பயன்படுத்திய கார் சந்தையில் மட்டுமே வாங்கிட முடியும்.

கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு தலைசிறந்த கார் மாடல்களின் விற்பனை சத்தமின்றி நிறுத்தப்பட்டு விட்டன. இன்றும் அமோக வரவேற்பை பெறக் கூடிய சில மாடல்கள் பல்வேறு காரணங்களால் சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சமீபத்திய புகை விதிகள், உற்பத்தியாளரால் தொடர்ந்து விற்பனை செய்ய முடியாத நிலை என ஏராளமான காரணங்கள் இதற்கு உள்ளன. அந்த வகையில், தற்போது பயன்படுத்திய கார் சந்தையில் மட்டுமே கிடைக்கும் டாப் 5 மாடல்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா டீசல்: இந்த மாடல் இந்திய சந்தையில் பிரபலமான சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி.-யாக இருந்தது. இதில் வழங்கப்பட்டு இருந்து 1.3 லிட்டர் DDIS என்ஜின் இந்த மாடல் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்த மாடல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷில் மட்டுமே கிடைக்கிறது.


ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி: பட்ஜெட் விலையில் அதிக பெர்பார்மன்ஸ் கொண்ட கார் வேண்டுமெனில் சிந்திக்காமல் தேர்வு செய்யக் கூடிய மாடல் இது. இந்த மாடல் DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. தற்போதைய புது மாடல்களில் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

ஹோண்டா சிவிக்: பழைய தலைமுறை சிவிக் மாடல் பயன்படுத்திய கார் மாடல்கள் சந்தையில் பிரபலமான மாடல்களில் ஒன்று ஆகும். புது தலைமுறை மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், ஹோண்டா நிறுவனத்தின் ப்ரோடக்‌ஷன் யுத்தி காரணமாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.


ரெனால்ட் டஸ்டர் டீசல்: தற்போது பயன்படுத்திய கார் மாடல்கள் சந்தையில் கிடைக்கும் சிறந்த காம்பேக்ட் டீசல் எஸ்.யு.வி. மாடல்களில் ரெனால்ட் டஸ்டர் ஒன்றாகும். இதில் உள்ள என்ஜின் 84 ஹெச்.பி. மற்றும் 108 ஹெச்.பி. என இருவித டியூனிங்கில் வழங்கப்படுகிறது.

மாருதி எஸ் கிராஸ் 1.6: காம்பேக்ட் கிராஸ்ஓவர் அல்லது எஸ்.யு.வி. பிரிவில் ராசியற்ற மாடலாக இது குறிப்பிட முடியும். இதில் உள்ள 1.6 லிட்டர் DDIS 320 டீசல் என்ஜின் தலைசிறந்த செயல்திறன் கொண்டது ஆகும். மேலும் இந்த மாடலின் விலை ரூ. 5.5 லட்சத்தில் இருந்தே கிடைக்கிறது.

Tags:    

Similar News