பைக்

டியூக் சீரிசை ஒட்டுமொத்தமாக அப்டேட் செய்த கேடிஎம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2022-09-02 14:08 IST   |   Update On 2022-09-02 14:08:00 IST
  • கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டியூக் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.
  • இந்த அப்டேட் மூலம் டியூக் மாடல்களில் காஸ்மெடிக் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது டியூக் சீரிஸ் மாடல்களை ஒட்டுமொத்தமாக அப்டேட் செய்து இருக்கிறது. கேடிஎம் 125 டியூக், 200 டியூக், 250 டியூக் மற்றும் 390 டியூக் என நான்கு மாடல்களும் அப்டேட் செய்யப்பட்டு, தற்போது புதிய நிறத்தில் கிடைக்கிறது.

புது அப்டேட் படி கேடிஎம் 125 டியூக் மாடல் தற்போது எலெக்டிரானிக் ஆரஞ்சு மற்றும் செராமிக் நிறங்களில் கிடைக்கிறது. இதில் வைட், ஆரஞ்சு, பிளாக் மற்றும் புளூ போன்ற நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 200 மற்றும் 250 டியூக் மாடல்கள் டார்க் சில்வர் மெட்டாலிக் மற்றும் எபோனி பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கின்றன. இவை பைக்கிற்கு கூர்மையான தோற்றத்தை வழங்கி உள்ளன.


390 டியூக் மாடல் தற்போது டார்க் கல்வேனோ நிறத்தில் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர நான்கு டியூக் மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் 125 டியூக் மாடலில் 124.7சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.3 ஹெச்பி பவர், 12 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே போன்றே மற்ற மாடல்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


விலை விவரங்கள்:

கேடிஎம் 125 டியூக் ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்து 041

கேடிஎம் 200 டியூக் ரூ. 1 லட்சத்து 91 ஆயிரத்து 693

கேடிஎம் 250 டியூக் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரத்து 222

கேடிஎம் 390 டியூக் ரூ. 2 லட்சத்து 96 ஆயிரத்து 230

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News