கார்

கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சத்து 95 ஆயிரம் வரையிலான சலுகைகள் - மஹிந்திரா அதிரடி

Published On 2022-10-20 10:18 GMT   |   Update On 2022-10-20 10:18 GMT
  • மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.
  • தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு மட்டும் இந்த சலுகைகள் அக்டோபர் மாத இறுதி வரை வழங்கப்பட இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை மையங்களில் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீ வடிவில் வழங்கப்படுகின்றன.

சலுகைகளை பொருத்தவரை மஹிந்திரா ஸ்கார்பியோ பழைய மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. இதே போன்று XUV300 வாங்குவோருக்கு ரூ. 29 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா பொலிரோ வாங்குவோருக்கு ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 8 ஆயிரத்து 500 மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 5 ஆயிரத்து 200 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ N, ஸ்கார்பியோ கிளாசிக், XUV700 மற்றும் தார் உள்ளிட்ட மாடல்களுக்கு எந்த விதமான சலுகளோ, பலன்களோ அறிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News