பிரெஸ்ஸா CNG மாடலை அறிமுகம் செய்த மாருதி சுசுகி
- மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புது பிரெஸ்ஸா மாடலின் மற்றொரு வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.
- விரைவில் பிரெஸ்ஸா CNG மாடலின் விற்பனை இந்தியாவில் துவங்க இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரெஸ்ஸா CNG மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. வரும் மாதங்களில் புதிய மாருதி பிரெஸ்ஸா CNG மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. தற்போது மாருதி அரினா விற்பனை மையங்களில் CNG ஆப்ஷன் இல்லாத ஒற்றை மாடலாக பிரெஸ்ஸா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பிரெஸ்ஸா CNG மாடல் காட்சிக்கு வைத்து விட்டது. காட்சிக்கு வைக்கப்பட்ட பிரெஸ்ஸா CNG மாடல் மேட் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற CNG மாடல்களை போன்றே பிரெஸ்ஸா மாடலிலும் CNG டேன்க் பூட் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை CNG மாடலில் அதன் பெட்ரோல் வேரியண்டில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
புது CNG வேரியண்ட் விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், பிரெஸ்ஸா மாடலின் VXi மற்றும் ZXi வேரியண்ட்களில் CNG ஆப்ஷன் வழங்கப்படலாம். பிரெஸ்ஸா CNG மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 99 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிது. இது CNG மோடில் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் போது, சப் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் CNG ஆப்ஷன் பெறும் முதல் மாடலாக பிரெஸ்ஸா இருக்கும்.