கார்

விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய மாருதி எர்டிகா

Published On 2024-02-09 13:28 GMT   |   Update On 2024-02-09 13:28 GMT
  • மாருதி எர்டிகா மாடல் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
  • இதன் விலை ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம் என துவங்குகிறது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா எம்.பி.வி. மாடல் இந்திய சந்தை விற்பனையில் புது மைல்கல் எட்டியது. கடந்த 2012-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மாருதி எர்டிகா மாடல் விற்பனையில் 10 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இதன் மூலம், மாருதி எர்டிகா மாடல் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய எம்.பி.வி. என்ற பெருமையை பெற்றது.

எம்.பி.வி. மாடல்கள் சந்தையில் மாருதி சுசுகி எர்டிகா 37.5 சதவீத பங்குகளை பெற்றிருக்கிறது. இந்த கார் LXi (O), VXi (O), ZXi (O) மற்றும் ZXi பிளஸ் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. மாருதி எர்டிகா மாடலின் விலை தற்போது ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

 


அறிமுகமான முதல் ஆண்டிலேயே எர்டிகா மாடல் விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. பிறகு, 2019 ஆண்டு ஐந்து லட்சம் யூனிட்களை கடந்தது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி எர்டிகா மாடல் மாதாந்திர அடிப்படையில் சராசரியாக 10 ஆயிரம் யூனிடகள் வரை விற்பனையாகி வருகிறது.

மூன்றடுக்கு இருக்கை கொண்ட எம்.பி.வி. பிரிவில் மாருதி சுசுகி எர்டிகா மாடல் XL6 மற்றும் இன்விக்டோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News