கார்

டாடா அல்ட்ரோஸ் CNG இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2023-05-23 08:45 GMT   |   Update On 2023-05-23 08:45 GMT
  • டாடா அல்ட்ரோஸ் i-CNG மாடலுக்கான முன்பதிவு துவங்கியது.
  • புதிய அல்ட்ரோஸ் i-CNG மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அல்ட்ரோஸ் i-CNG மாடலை அறிமுகம் செய்தது. புதிய அல்ட்ரோஸ் i-CNG மாடல் விலை ரூ. 7 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. டாடா அல்ட்ரோஸ் i-CNG மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கார் இந்திய சந்தையில் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும்.

புதிய டாடா அல்ட்ரோஸ் i-CNG மாடல் XE, XM+, XM+ (S), XZ, XZ+ (S) மற்றும் XZ+ O (S) போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் அவென்யூ வைட், ஆர்கேட் கிரே, டவுன்டவுன் ரெட் மற்றும் ஒபேரா புளூ போன்ற நிறங்களிலும், அவென்யூ வைட் மற்றும் பிளாக் ரூஃப், டவுன்டவுன் ரெட் மற்றும் பிளாக் ரூஃப், ஒபேரா புளூ மற்றும் பிளாக் ரூஃப் போன்ற டூயல் டோன் நிறங்களிலும் கிடைக்கிறது.

புதிய அல்ட்ரோஸ் i-CNG மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் CNG கிட் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 87 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 72 ஹெச்பி பவர், 103 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

டாடா பன்ச் iCNG மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

Tags:    

Similar News