ஆட்டோமொபைல்
பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிஷன்

இந்திய சந்தையில் புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

Published On 2021-01-07 11:19 GMT   |   Update On 2021-01-07 11:19 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ் கிளாஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம்.


மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.51 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிஷன் புதிய வெளிப்புற நிறம், மேம்பட்ட இன்டீரியர், புது கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. மேலும் மெர்சிடிஸ் மி கனெக்ட் தொழில்நுட்பம் கொண்டு முதல் மெர்சிடிஸ் கார் இது ஆகும்.



மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிஷன் எஸ்350டி வேரியண்ட்டை தழுவி உருவாகி இருக்கிறது. இதில் 3.0 லிட்டர் இன்-லைன், 6 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 286 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.0 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

Similar News