சினிமா

அனுஷ்காவின் கேரவன் பறிமுதல்: பொள்ளாச்சியில் பரபரப்பு

Published On 2017-05-31 16:24 IST   |   Update On 2017-05-31 16:24:00 IST
நடிகை அனுஷ்காவின் கேரவன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நடிகை அனுஷ்கா நடிக்கும் தெலுங்கு படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இதற்காக நடிகை அனுஷ்கா அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளார். தினமும் அவர் அங்கிருந்து சினிமா படப்பிடிப்புக்கு சென்று வந்தார். ஆனைமலை பகுதியில் இன்று படப்பிடிப்பு நடந்தது.

இதில் அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவனுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறி போக்குவரத்து அதிகாரிகள் கேரவனை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.



கேரவன் பறிமுதல் செய்யப்பட்டபோது கேரவனில் அனுஷ்கா இல்லை. அவர் பயன்படுத்திவந்த வாகனத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் வரி பாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கேரவனின் உரிமையாளர் இளங்கோவனிடம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவின் பல்வேறு சாதனைகளை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News