சினிமா செய்திகள்

Happy Birthday Maestro - வாழ்த்து தெரிவித்த இளையராஜா படக்குழு

Published On 2024-06-02 06:20 GMT   |   Update On 2024-06-02 06:20 GMT
  • இசைஞானி இளையராஜா இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
  • 'இளையராஜா' திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம்.

இசைஞானி இளையராஜா இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசைஞானியின் பிறந்தநாளையொட்டி, 'இளையராஜா' திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம்.

தமிழ் திரையுலகில் இசை ஜாம்பவானாக வலம் வரும் இளையாராஜா வாழ்க்கை சினிமா படமாக உள்ளது. இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார். மேலும், இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு பிரத்யேகமாக இசையமைப்பாலர் என்றூ யாரும் இல்லை, இளையராஜா உருவாக்கிய சிம்ஃபனிகளை பயன்படுத்தி படம் உருவாகவுள்ளது.

பிறந்தநாளையொட்டி இசைஞானி இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

"பிறந்தநாள் வாழ்த்துகளை நீங்கள்தான் எனக்கு சொல்கிறீர்களே தவிர, எனது மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால், எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. ரசிகர்களுக்காகத்தான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; எனக்கு அது இல்லை. நன்றி... வணக்கம்" என்று உருக்கமாக கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News