சினிமா செய்திகள்
null
ரஜினியுடன் இணைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்
- ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி வைரலாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் சண்டை இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தின் சண்டை இயக்குனராக ஸ்டண்ட் சிவா மற்றும் அவரது மகன்கள் கெவின் ஸ்டீவன் ஆகியோர் பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.