null
ரிஷப் பண்டை பளாரென்று அறைவேன்- கபில்தேவ் இப்படி சொல்ல என்ன காரணம்?
- பண்ட் இல்லாதது இந்திய அணியை சிதைத்து விட்டது.
- நான் ரிஷப் பண்டை மிகவும் நேசிக்கிறேன். அவர் நலமடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து உத்தரகாண்டுக்கு சொகுசு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் ரிஷப்பண்ட் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
விபத்துக்கு நடந்து சில தினங்கள் முடிந்த நிலையில் ரிஷப் பண்ட் இன்ஸ்டாகிராமில் நேற்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் 'வெளியே உட்கார்ந்து புதிய காற்றை சுவாசிப்பது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்ற தலைப்புடன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ரிஷப் பண்டை அறைவேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் ரிஷப் பண்டை மிகவும் நேசிக்கிறேன். அவர் நலமடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பண்ட் இல்லாதது இந்திய அணியை சிதைத்து விட்டது. அவர் நலம் பெற்றதும் நான் சென்று அவரை கடுமையாக அறைவேன். ஏனென்றால் நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் தவறு செய்யும் போது அறையும் உரிமை பெற்றோருக்கு இருப்பதைப் போல, குணமடைந்த பிறகு பண்ட்டையும் அறைய விரும்புகிறேன்.
என்று கபில் தேவ் கூறினார்.