கிரிக்கெட் (Cricket)
சிஎஸ்கே அணிக்கு எதிராக தமிழக வீரர் சுதர்சன், கில் அதிரடி சதம்: குஜராத் 231 ரன்கள் குவிப்பு
- சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.
- சென்னை அணி தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் -சாய் சுதர்சன் சதம் அடித்தனர்.
சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.