கிரிக்கெட் (Cricket)
null

ஆர்சிபி அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்

Published On 2024-05-11 11:02 GMT   |   Update On 2024-05-11 11:07 GMT
  • டெல்லி அணி அடுத்த போட்டியில் நாளை ஆர்சிபி அணியுடன் மோதவுள்ளது.
  • இந்த முக்கியமான போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்கிறது.

இந்நிலையில் டெல்லி அணி அடுத்த போட்டியில் நாளை ஆர்சிபி அணியுடன் மோதவுள்ளது. இந்த முக்கியமான போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2 முறை மெதுவாக பந்து வீசியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த இந்நிலையில் 3-வது முறையாக இந்த போட்டியிலும் மெதுவாக பந்து வீசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டியில் விளையாட தடை மற்றும் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

Tags:    

Similar News