கிரிக்கெட் (Cricket)

எனக்கும் கோலிக்கும் உண்டான உறவு... மனம் திறந்து பேசிய கம்பீர்

Published On 2024-05-30 09:10 GMT   |   Update On 2024-05-30 09:10 GMT
  • விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
  • கம்பீர் உடன் நான் சமரசத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.

இந்த சம்பவங்கள் குறித்து பேசிய விராட் கோலி, "கம்பீர் உடன் நான் சமரசத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது. அவர்களுக்கு மசாலா தீர்ந்துவிட்டது என நினைக்கிறேன்" என்று கிண்டலாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோலி உடனான உறவு குறித்து கம்பீர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

"விராட் கோலி உடனான எனது உறவை இந்த நாடு அறியத் தேவையில்லை. உங்களின் கணிப்புகள் எல்லாம் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளன. அணியின் வெற்றிக்கு உதவுவதற்காக, உணர்ச்சிகளை வெளிப்படுத்த என்னைப்போல அவருக்கும் உரிமை உண்டு. எங்களின் உறவு மக்களுக்கு மசாலா கொடுக்கும் உறவாக இருக்காது" என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News