கிரிக்கெட் (Cricket)

ஒரு பவுலரை அடிக்க முடியும் என முடிவு செய்துவிட்டால்... தொடர் நாயகன் ஜெய்ஸ்வால் பேட்டி

Published On 2024-03-09 19:49 IST   |   Update On 2024-03-09 19:49:00 IST
  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.
  • 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஜெய்ஸ்வால். அதில், "இந்த தொடர் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.இந்த தொடர் முழுவதுமே என்னுடைய பங்களிப்பை நான் சிறப்பாக வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

நான் ஒரு பவுலரை அடிக்க முடியும் என்று முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக அந்த ஓவரில் அதிரடியாக விளையாட முயற்சிப்பேன். அதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. அதிலிருந்து நான் பின்வாங்கியதே கிடையாது. அதேபோன்று ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டே இருந்தேன்.

இந்திய அணியை வெற்றியை நோக்கி தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாகவும் இருந்தது" என அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News