கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பில்லை.. அடுத்த கேப்டன் இவரா? - வெளியான தகவல்

Published On 2025-02-15 19:07 IST   |   Update On 2025-02-15 19:07:00 IST
  • தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது
  • இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும் இந்திய அணி துபாய் புறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரோகித் சர்மா தொடர்பான ஒரு பெரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, தற்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா இனி டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று PTI அறிக்கை வெளியாகி உள்ளது.

மேலும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருக்கும் பும்ரா, இந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா இல்லாதபோது பும்ரா இதற்கு முன்பு மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News