அம்பானி குடும்ப நிகழ்ச்சி: தாண்டியா நடனம் ஆடிய டோனி, பிராவோ தம்பதி- வைரலாகும் வீடியோ
- டோனி மற்றும் பிராவோ தாண்டியா ஆட்டத்தை உற்சாகமாக ஆடியுள்ளனர்.
- டோனி மனைவி சாக்ஷி மற்றும் பிராவோவின் மனைவியும் தாண்டியா ஆட்டம் ஆடினார்கள்.
ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2-ம் தேதி பங்கேற்று வந்தார் கேப்டன் எம்எஸ் டோனி. சக வீரர்களுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்கு தயாராகுவதோடு, பயிற்சி முகாமிலேயே ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் திட்டங்களை ஆலோசிப்பார். அதேபோல் இளம் வீரர்களை புரிந்து கொள்ளும் காலமாக இந்த மாதம் அமையும்.
ஆனால் முதல்முறையாக சிஎஸ்கே பயிற்சி முகாமில் டோனி தாமதமாக பங்கேற்கிறார். இதற்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது தான் காரணமாக அமைந்துள்ளது. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் இருவருக்கும் ஜூலை 12-ல் திருமணம் நடக்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் டோனி மற்றும் பிராவோ தாண்டியா ஆட்டத்தை உற்சாகமாக ஆடியுள்ளனர். அவருக்கு அருகே மனைவி சாக்ஷி மற்றும் பிராவோவின் மனைவியும் தாண்டியா ஆட்டம் ஆடினார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.