2025-ம் ஆண்டின் முதல் வெற்றி.. முதல் சதம்.. இலங்கை அணி அசத்தல்
- இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.
- நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இலங்கை 218 ரன்கள் அடித்தும் 7 ரன்களில் ஆறுதல் வெற்றியை பெற்றது.
46 பந்தில் 101 ரன்கள் குவித்த குசால் பெரேரா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். நியூசிலாந்து ஜேக்கப் டஃபி தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் 2025-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்த அணியாக இலங்கை சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சதத்தை இலங்கை அணியின் குசல் பெர்ரோ பதிவு செய்துள்ளார்.