null
வீடியோ: தொடக்க ஓவரில் அதிக ரன்கள் விளாசிய முதல் இந்தியர்.. உலக அளவில் 4-வது வீரர்.. ஜெய்ஸ்வால் சாதனை
- முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- 2-வது இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
சிட்னி:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களிலும் ஆல் அவுட் ஆனார்கள்.
பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்துள்ளது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக 2-வது இன்னிங்சில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால், ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சின் முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். ஒருநாள் (16) மற்றும் டி20 (18) போட்டியில் தொடக்க ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரராக சேவாக் உள்ளார்.
டெஸ்ட்டில் ஒட்டுமொத்தமாக 4-வது இடத்தை ஜெய்ஸ்வால் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்கள் முறையே மைக்கேல் ஸ்லேட்டர் (ஆஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) ஓஷத பெர்னாண்டோ (இலங்கை) ஆகியோர் தொடக்க ஓவரில் 16 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.