null
பேட்டிங் செய்யலாம்.. பும்ராவின் காயம் குறித்து வெளியான அப்டேட்
- ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது.
- ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விளையாடி கொண்டிருந்த போது பும்ரா பாதியிலேயே வெளியேறினார்.
5-வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது.
ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விளையாடி கொண்டிருந்த போது இந்திய அணியின் கேப்டன் பும்ரா பாதியிலேயே வெளியேறினார். 2-வது நாளின் முதல் செஷனின் கடைசி 5 ஓவர்களில், பும்ரா 3 ஓவர்களை வீசினார். இதனைத் தொடர்ந்து, உணவு இடைவேளைக்கு பிறகு வந்த பும்ராவால், 120 மற்றும் 130 வேகத்தில்தான் பந்துவீச முடிந்தது. அப்போது, பும்ரா சோர்வுடனும் காணப்பட்டார். இதனால், உடனே களத்தை விட்டு வெளியேறிய பும்ரா, மருத்துவ ஊழியருடன் இணைந்து, மருத்துவனைக்கு சென்றார்.
இந்நிலையில் அவரது காயம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 3-ம் நாளில் பும்ரா நிச்சயமாக பேட்டிங் செய்வார். ஆனால் காலையில் அவர் எப்படி உணருகிறார் என்பதைச் சரிபார்த்த பிறகு அவரது பந்துவீச்சு குறித்து முடிவு எடுக்கப்படும் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.