கிரிக்கெட் (Cricket)

வீடியோ: குறைந்த பந்தில் அரைசதம்: விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட்

Published On 2025-01-04 06:55 GMT   |   Update On 2025-01-04 06:55 GMT
  • 2-இன்னிங்சில் களமிறங்கிய ரிஷப் பண்ட், தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக மாற்றினார்.
  • ரிஷப் பண்ட் சிக்சர் அடித்து அரை சதம் கடந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் 4 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

இந்த இன்னிங்சிலும் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது. தொடக்க வீரர்களான ராகுல் 13, ஜெய்ஸ்வால் 22, விராட் கோலி 6, சுப்மன் கில் 13 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக மாற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி பண்ட் சிக்சர் அடித்து (29 பந்தில்) அரை சதம் கடந்தார். அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

160 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக முறை 50+ ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் (2 முறை) சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார்.

மேலும் குறைந்த பந்தில் அரை சதம் கடந்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அந்த பட்டியலில் முதல் இடத்திலும் ரிஷ்ப் பண்ட் தான் உள்ளார். 2022-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 28 பந்தில் அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த பந்தில் அரை சதம் விளாசிய இந்திய வீரர்கள்:-

ரிஷ்ப பண்ட் 28 பந்தில் (இலங்கை 2022)

ரிஷப் பண்ட் 29 பந்தில் (ஆஸ்திரேலியா)

கபில் தேவ் 30 பந்தில் (பாகிஸ்தான் 1982)

ஷர்துல் தாகூர் 31 பந்தில் (இங்கிலாந்து 2021)

ஜெய்ஸ்வால் 31 பந்தில் (வங்கதேசம் 2024)

Tags:    

Similar News