ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்- 47 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- இந்திய தரப்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும் பும்ரா, நிதிஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும் பும்ரா, நிதிஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் பும்ரா 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 47 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் பிஷன் சிங் பேடியின் சாதனையை பும்ரா (32) முறியடித்துள்ளார்.
1977/1978 -ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிஷன் சிங் பேடி 31 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடதக்கது.
ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள்
32* 2024/25-ல் ஜஸ்பிரித் பும்ரா
1977/78-ல் 31 பிஷன் பேடி
1977/78-ல் 28 பிஎஸ் சந்திரசேகர்
1967/68-ல் 25 இஏஎஸ் பிரசன்னா
1991/92-ல் 25 கபில் தேவ்