கிரிக்கெட் (Cricket)
null

சிட்னியில் 46 ஆண்டுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? 5-வது டெஸ்ட் நாளை தொடக்கம்

Published On 2025-01-02 12:02 GMT   |   Update On 2025-01-02 12:05 GMT
  • ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது.
  • சிட்னியில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 46 ஆண்டுகள் ஆகியுள்ளன.

சிட்னி:

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பாரடர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

தொடர்ந்து 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 46 ஆண்டுகள் ஆன நிலையில், நாளை தொடங்கும் 5-வது டெஸ்டில் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றுமா? என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடைசியாக 1978-ல் நடந்த போட்டியில் இந்தியா வென்றிருந்தது. அதற்குப் பிறகு நடந்த 12 போட்டிகளில் 5-ல் இந்தியா தோல்வி அடைய 7 போட்டிகள் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்க முடியும் (கடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது). அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பிலும் நீடிக்கலாம்.

Tags:    

Similar News