கிரிக்கெட்

இந்தியா மீது குற்றம்சாட்டிய இன்சமாமுக்கு வீடியோ மூலம் பதிலடி கொடுத்த ரிச்சர்ட் கெட்டில்பரோ

Published On 2024-06-26 07:42 GMT   |   Update On 2024-06-26 07:42 GMT
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது 15-வது ஓவரில் இருந்து பந்து ரிவர்ஸ் சுவிங் ஆனது.
  • இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவராக பணியாற்றிய ரிச்சர்ட் கெட்டில்பரோ அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த போட்டியின் போது இந்திய அணி பந்து வீச்சாளர்கள் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறினார். அதனால்தான் 15-வது ஓவரில் இருந்து பந்து ரிவர்ஸ் சுவிங் ஆனது. மேலும் 12, 13-வது ஓவரில் இருந்தே பந்து ரிவர்ஸ் சுவிங்குக்கு தயாராகி விட்டது. இதனை நடுவர்கள் கவனித்திருக்க வேண்டும் என இன்சமாம் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவராக பணியாற்றிய ரிச்சர்ட் கெட்டில்பரோ எக்ஸ் தளத்தில் அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

2022-ம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் 2-வது பந்தில் பாபர் அசாம் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆவார். அந்த வீடியோவை பதிவிட்டு இதற்கு உங்கள் கருத்து என்ன என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News