கிரிக்கெட் (Cricket)
null

சுப்மன் கில் மாதிரி யாராவது கடைசிவரை விளையாடியிருந்தால் முடிவு மாறியிருக்கும்- ரோகித் சர்மா

Published On 2023-05-27 09:51 GMT   |   Update On 2023-05-27 12:17 GMT
  • குஜராத் வீரர்கள் 25 ரன்கள் அதிகமாக அடித்து விட்டனர்.
  • இஷான் கிஷனுக்கு இப்படி ஆனது எதிர்பாராத ஒன்று.

16-வது ஐபிஎல் சீசனின் குவாலிஃபையர் 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டு இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 18.2 ஓவரில் 171 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் மும்பை அணி தொடரிலிருந்து வெளியேறியது. குஜராத் அணி வீரர் மோஹித் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பவர் பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்தது பெரிய இழப்பாக இருந்தது என மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

சுப்மன் கில் சிறப்பாக பேட்டிங் செய்தார். அடித்து ஆடுவதற்கு ஏற்ற ஆடுகளம். குஜராத் வீரர்கள் 25 ரன்கள் அதிகமாக அடித்து விட்டனர். கிரீன், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார்கள். பவர் பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்ததால் மொமண்டம் கிடைக்கவில்லை.

சுப்மன் கில் மாதிரி யாராவது ஒரு பேட்டர் கடைசிவரை விளையாடி இருந்தால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஏனெனில் இது விளையாடுவதற்கு நல்ல மைதானம். இஷான் கிஷனுக்கு இப்படி ஆனது எதிர்பாராத ஒன்று. கடந்த போட்டியில் சிறப்பாக பந்து விசிய பவுலர்கள் இந்தப் போட்டியில் சரியாக பந்து வீசவில்லை. இன்று விளையாடியதை வைத்து எதையும் மதிப்பிட முடியாது. குஜராத் அணி நன்றாக விளையாடியது. சுப்மன் கில் இனிவரும் போட்டிகளிலும், அவரது இந்த ஃபார்ம் தொடரும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News