கிரிக்கெட் (Cricket)

சிக்சரால் காயமடைந்த சிறுமிக்கு சாக்லேட் வழங்கிய ரோகித் சர்மா

Published On 2022-07-14 09:50 GMT   |   Update On 2022-07-14 09:50 GMT
  • இந்தியா-இங்கிலாந்து அணி சிக்சரால் காயமடைந்த சிறுமிக்கு பரிசுகள் வழங்கியது.
  • ரோகித் சர்மா அடித்த சிக்சரால் காயமடைந்த சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல்

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி 12-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி பும்ரா, சமி ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 110 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 18.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சர் 6 பவுண்டரி அடங்கும். இவர் அடித்த சிக்சரில் 6 வயது சிறுமி காயமடைந்தார். அதனால் சிறிது நேரம் தடைப்பட்டது. அதன் பின் இங்கிலாந்து அணியின் மருத்துவக்குழு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர்.


போட்டி முடிந்த பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா அந்த குழந்தையை சந்தித்து சாக்லேட் வழங்கியுள்ளார். மேலும் இங்கிலாந்து அணி அவருக்கு இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டிக்கான ஜெர்சியை பரிசாக வழங்கியது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News