கிரிக்கெட் (Cricket)

மிகவும் மதிப்பு மிக்க பிரபலம் பட்டியலில் ரன்வீர் சிங், ஷாருக்கானை முந்திய விராட் கோலி

Published On 2024-06-18 12:01 GMT   |   Update On 2024-06-18 12:01 GMT
  • விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
  • பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிராண்ட் மதிப்பு 203.1 மில்லியன் டாலராகும்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர் விளம்பரம், கிரிக்கெட் வருமானம் மூலம் அதிக அகளவில் சம்பாதிக்கிறார். இதனால் அவரின் பிராண்ட் மதிப்பு எப்போதுதும் உயர்ந்ததாகவே இருந்து வருகிறது.

தற்போது மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் ரன்வீர்சிங், ஷாருக்கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இந்த வருடம் அவருடைய பிராண்ட் மதிப்பு 29 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது முக்கிய காரணம் ஆகும்.

க்ரோல் (Kroll) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2023-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியன் அமெரிக்க டாலராகும். 2020-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 237.7 மில்லியான இருந்தது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிராண்ட் மதிப்பு 203.1 மில்லியன் டாலராகும். ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு 120.7 மில்லியன் டாலராகும்.

இந்த பட்டியலில் சச்சின் தெண்டுல்கர், எம்.எஸ். டோனியும் இடம் பிடித்துள்ளனர். எம்.எஸ்.டோனியின் பிராண்ட் மதிப்பு 95.8 மில்லியன் ஆகும். சச்சின் தெண்டுல்கரின் பிராண்ட் மதிப்பு 91.3 மில்லியன் ஆகும்.

Tags:    

Similar News