ஆன்மிகம்

வேதம் கூறுகிறது பாவத்தின் சம்பளம் மரணம்

Published On 2017-05-31 11:48 IST   |   Update On 2017-05-31 11:48:00 IST
ஏசாயா 1:18-ல் உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் ரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்
உமது நாமத்தை நான் துதிக்கும்படி என் ஆத்மாவை காவலுக்கு நீங்கலாக்கிவிடும். சங்கீதம் 142:7

பாவமும், பாவசெயல்களும், பாவத்தை தூண்டிவிடும் காட்சிகள் தினமும் பெருகி வருகிறது. அக்கிரமங்கள் பெருகி வருகிறது. அனைவரும் பயத்தோடும், கலக்கத்தோடும் இருக்கிறார்கள். மக்கள் இந்த அளவுக்கு மோசம்போக காரணம் என்ன? இதற்கு பரிகாரம் உண்டா? அறிவும், அறிவியலும் அதன் உச்சகட்டம் தாண்டியும் பலன் இல்லை.

இங்கேதான் யாவையும் படைத்த தேவனுடைய வல்லமை விளங்குகிறது. பரிசுத்த வேதாகமத்தில் 2 தீமோத்தேயு 3:1 சொல்கிறது. கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. இப்படி பாவத்தில் மூழ்கின மக்கள் நிம்மதியை இழந்தவர்களாகவும், வாழ்க்கையை வெறுத்தவர்களாகவும், பாவ செயல்களில் ஈடுபடுகிறவர்களாகவும் காணப்படுகிறார்கள். வேதம் கூறுகிறது பாவத்தின் சம்பளம் மரணம்.

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டே செத்து பிழைத்து கொண்டேயிருக்கிற எண்ணிக்கையற்ற கைதிகள் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள். அந்த நிலையில் இருந்த ஒரு கைதியைப்பற்றி பைபிள் கூறுகிறது பாருங்கள். லூக்கா 23:19, யோவான் 18:40 பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கொலைபாதகத்தினிமித்தமும், கலகத்தினிமிந்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான். மரண சாசனம் எதிர்பார்த்துக் கொண்டேயிருந்த பரபாசை விடுவிக்க ஒருவருமில்லை. பரபாசின் நாட்கள் எண்ணப்பட்டிருந்தது. அவன் கதறி அழுகி றான். என்னை யார் விடுதலையாக்குவார். ரோமர் 7:24.



வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28 உன்னை நான் என் உள்ளங்கையில் வரைந்துள்ளேன். நீ எனக்குரியவன் என்று ஏசு கூறுகிறதும் அல்லாமல் உன் பாவங்களின் தண்டனை அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லி பரபாஸ் என்கிற கைதியை சிறையினின்று விடுதலை பண்ணுகிறார்.

நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்காக பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். 1 யோவான் 3:1. இனிமேல் பரபாஸ் என்பவன் கைதி இல்லை. அவன் நீதிமான் என்று தீர்க்கப்பட்டார். அவனுக்காக ஏசு தண்டிக்கப்பட்டார். யார் இந்த பரபாஸ்? நானும் நீங்களும்தான். நமக்காக அவர் தமது உடம்பிலே 5 விதமான காயங்கள் ஏற்றுக்கொண்டார். அவருடைய உடல் நமக்காக நொறுக்கப்பட்டது. ஆம் இந்த சிலுவை நமக்காகத் தான்.

ஏசாயா 1:18-ல் உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் ரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். ஆதலால் நாம் பரிசுத்தமாக்கப்படுவதற்காகவும், பாவ சிறைக்கு நீங்கலாக்கப்படவும் அவர் சிலுவையை ஏற்றுக் கொண்டார்.

- பாஸ்டர். புராவத்து.

Similar News