ஆன்மிகம்
எதிரிகள் தொல்லை நீங்க சூரிய காயத்ரி சொல்லுங்கள்
நவக்கிரகங்களில் ராஜகிரகமாக விளங்கும் சூரியனை வழிபட்டு, சூரியனுக்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்வதன் மூலம் எதிரிகள் விலகுவர்.
நவக்கிரகங்களில் ராஜகிரகமாக விளங்கும் சூரியனை வழிபட்டு, சூரியனுக்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்வதன் மூலம் எதிரிகள் விலகுவர். சத்ருக்களை அண்டவிடாமல் இருக்கவும், வெற்றியை நமக்கு வரவழைத்துக் கொடுக்கவும் இந்தச் சூரிய காயத்ரி மந்திரம் நமக்கு உகந்ததாக அமையும். ராமபிரான் தினமும், சூரியனை வழி பாடு செய்ததோடு, ஆதித்ய ஹிருதய சுலோகத்தையும் கூறி வந்ததால், ராவணனை சம்ஹாரம் செய்து வெற்றி கண்டார். பஞ்சபாண்டவர்கள் சூரியனை வேண்டிக்கொண்டதன் மூலம் அட்சய பாத்திரத்தைப் பெற்றனர். எனவே சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் எதிரிகளை வெல்லும் ஆற்றல் நமக்குக் கிடைக்கும்.
சூரிய காயத்ரி:-
‘ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூரிய ப்ரசோதயாத்’
இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 51 முறை சொல்லலாம். இதைப் படிப்பதன் மூலம் சூரியனின் அருள் கிடைப்பதோடு, அரசாங்க வேலை, உயர் பதவி, அரசியலில் முன்னேற்றம் கிடைக்கும். கண்நோய், காமாலை நோய், இதயநோய் அகலும். சூரிய வழிபாடு வெற்றி வாய்ப்பை வழங்கும்.