ஆன்மிகம்

கல்லக்குடி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2016-06-07 13:38 IST   |   Update On 2016-06-07 13:38:00 IST
கல்லக்குடியில் திரெளபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், கல்லக்குடியில் கடந்த மே மாதம் 1-ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 6 மணியளவில் புதுவாக் கரையில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து இரவு 8 மணி முதல் 37 நாட்கள் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து 6 ம் தேதி நேற்று மாலை 5 மணியளவில் சாமிக்கு வேண்டுதல் செய்த பக்தர்கள் நேர்த்தி கடன் செய்யும் வகையில் பூக்குழியில் இறங்கி தீமிதி திருவிழா நடைபெற்றது.

தொடர்ந்து இன்று 7 ந் தேதி காலை 11 மணியளவில் தேரோட்ட விழா நடைபெற்றது. 8-ந் தேதி நாளை இரவு 9 மணியளவில் சாமி பல்லக்கில் திருவீதியுலா நடைபெறும். தொடர்ந்து 9ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் சாமி குடிபுகுதல் நிகழ்வும் நடைபெறும். மகாபாரத சொற்பொழிவு ஆசிரியர் சிவகாமி முருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி ஆங்காங்கு பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

விழாவில் பளிங்காநத்தம், பழனியாண்டிநகர், வடுகர் பேட்டை, ஆரோக்கியபுரம், சன்னாவூர், முதுவத்தூர், மேலரசூர், வரகுப்பை, தாப்பாய் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம காரியஸ் தர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், திருப்பணி குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News