ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாலாலயத்திற்கான சிறப்பு பூஜைகள் தொடங்கின
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாலாலயத்திற்கான சிறப்பு பூஜைகள் தொடங்கியது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடாக பாலாலயம் நிகழ்ச்சி நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு பூஜைகள் நேற்று காலை தொடங்கின.
நேற்று காலை அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, தேவதா அனுக்ஜை மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. நேற்று மாலையில் அங்குரார்ப்பணம் மற்றும் தங்க விமானம் உள்ளிட்ட விமானங்களுக்கு பாலஸ்தாபன கலாகர்சனம் மற்றும் மூலஸ்தான மாரியம்மன் பாலஸ்தாபன கலாகர்சனம் ஆகியவையும் நடைபெற்றன. இரவு 10.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் நடந்தன. மாலை 5.30 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகளும் நடந்தது.