ஆன்மிகம்

கன்யா கேது என்பதன் சிறப்பு என்ன?

Published On 2016-07-22 13:18 IST   |   Update On 2016-07-22 13:18:00 IST
கன்னியில் அமரும் கேது கன்யா கேது என்று நமது மூலநூல்களில் சிறப்பாகச் சொல்லப்படுவதால் கன்னிநாதனான புதனின் மேல் கேதுவிற்கு எப்போதுமே ஒரு புரிதல் உண்டு.
கன்னியில் அமரும் கேது கன்யா கேது என்று நமது மூலநூல்களில் சிறப்பாகச் சொல்லப்படுவதால் கன்னிநாதனான புதனின் மேல் கேதுவிற்கு எப்போதுமே ஒரு புரிதல் உண்டு.

ராகு கேதுக்கள் தலை வாலான ஒரே உயிர் என்பதால்தான் புதனின் முதல் வீடு எனப்படும் தலை வீடான மிதுனத்தின் ஒரே சுபர் ராகு எனவும், இறுதி வீடான வால் வீடு கன்னி கேதுவிற்கு சிறப்பாக இடமாகவும் சொல்லப்பட்டது. ராகு கேதுக்களை எதிரெதிர் நிலைகளைக் கொண்ட ஒரே உயிர் என்ற அமைப்புடன்  நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டீர்களேயானால் பல ஜோதிட சூட்சுமங்கள் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

இன்னும் துல்லியமாகச் சொன்னால் கேது ஒரு வால் என்பதனால் ராகு ஒரு செயலின் ஆரம்பம் என்றால் கேது அந்தச் செயலின் இறுதியாக இருப்பார். ஒரு செயலின் அனைத்து இறுதிகளோடும் கேதுவிற்குச் சம்பந்தம் உண்டு. எல்லா இறுதிகளிலும் இருக்கும் கேது சுபராவார். ஒரு சம்பவத்தின் இறுதி கேதுவால் நடக்கும்.

ஒரு மனிதனின் அன்றைய தினத்தின் இறுதிப் பகுதியான இரவு கேதுவோடு சம்பந்தப்பட்டது. அதுபோலவே ஒரு மனிதனின் வாழ்வின் இறுதி நிகழ்ச்சியான மரணம் வரும் அமைப்பும், மரணத்திற்குப் பின் அந்த மனிதனின் நிலையையும் கேதுவே குறிப்பிடுவார்.

இந்த அமைப்பினால்தான் ஒரு ஜாதகத்தின் இறுதி நிலையான பனிரெண்டாம் வீட்டில் இருக்கும் கேது நல்லநிலையாக நமக்குச் சொல்லப்பட்டு இந்த அமைப்பு இருப்பவர்களுக்கு இதுவே இறுதிப்பிறவி என்றும் ஞானிகளால் நமக்கு அறிவுறுத்தப்பட்டது.

Similar News