ஆன்மிகம்

கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Published On 2016-07-26 07:58 IST   |   Update On 2016-07-26 07:57:00 IST
கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் பூதேவி சமேத பெருமாளுக்கு வஜ்ராங்கி அணிவிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம் நிரவியில் ஜம்புநாதசுவாமி தேவஸ்தானத்தை சேர்ந்த கரியமாணிக்கப்பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் உற்சவருக்கு பக்தர்கள் சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் புதிதாக வஜ்ராங்கி செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரியமாணிக்கப்பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு வஜ்ராங்கி அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதையொட்டி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News