ஆன்மிகம்
விநாயகர் சதுர்த்தி விழா: மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப் பட்டது. புதுச்சேரியிலும் விழா சிறப்பாக கொண் டாடப்பட்டது. பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதன்பின் காலை 4.45 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சிரமமின்றி பக்தர்கள் விநாயகரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
முதல்-அமைச்சர் நாராய ணசாமி காலை 7.30 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலுக்குச் சென்றார். அவரை கோவில் அறங்காவல் குழு தலைவர் ராமச்சந்திரன், நிர்வாக அதிகாரி வெங்க டேசன் ஆகியோர் வரவேற்று கோவிலின் உள்ளே அழைத்துச் சென்றனர். கோவில் கருவறைக்குள் சென்ற முதல்- அமைச்சர் நாராயணசாமி பய பக்தியுடன் சாமி கும்பிட்டார்.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு இடைவிடாமல் லட்டு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை உச்சிகால பூஜை நடந்தது. இரவில் சாமி வீதி உலா நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில், கணபதி நகர் பெரியாண்டவர் கோவில், திருவள்ளுவர் நகர் குரு வேலாயுதம் ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். பின்னர் அவல், பொரி மற்றும் பழங்கள், அருகம்புல் ஆகிய வற்றால் படையல் வைத்து, பூக்களால் அலங்காரம் செய்து விநாயகரை வழிபட்டனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்கியமான வீதிகளில் நேற்று தற்காலிக கடைகள் முளைத்திருந்தன. அங்கு விநாயகருக்கு படையல் வைக்க தேவையான பொருட்களும், அலங்காரம் செய்வதற்கு தேவையான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.